விளையாட்டுக் கழகங்களின் செயற்பாட்டை ஊக்குவிக்க விளையாட்டமைச்சு நடவடிக்கை!

எஸ்.எம்.அறூஸ்
நாடு முழுவதிலும் உள்ள சகல  பிரதேச செயலகங்களிலும் பதிவு செய்யப்பட்ட  செயல் ஊக்கமுள்ள விளையாட்டுக் கழகங்களை இனங்கண்டு அவர்களின் திறமைகளை மேம்படுத்துவதற்கும், செயற்பாடற்ற விளையாட்டுக் கழகங்களை செயல் ஊக்கம் உள்ள கழகங்களாக மாற்றுவதற்கும் நவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர் சட்டத்தரணி எம்.ஏ.அன்ஸில் தெரிவித்தார்.
1449715061-33148
விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர மற்றும் பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் ஆகியோரின் வேண்டுகோளின் பேரில் விளையாட்டு அபிவிருத்தித் திணைக்களம் இத்திட்டத்தை முன்னடுக்கவுள்ளது.
அத்தோடு இவ்வேலைத்திட்டத்திற்கு சமாந்தரமாக விளையாட்டுக் கழக உறுப்பினர்களுக்கான விளையாட்டு போட்டித் தொடரொன்றை நடாத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவித்தல்கள் சகல பிரதேச செயலகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் இணைப்புச் செயலாளர் அன்ஸில் மேலும் தெரிவித்தார்.