தேசிய வருமானத்தை 20 வீதமாக அதிகரிப்பதற்கு நடவடிக்கை : சுஜீவ சேனசிங்க !

பத்து வீதமாகக் காணப்படுகின்ற தேசிய வருமானத்தை 20 வீதமாக அதிகரிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச வர்த்தக இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவயியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

 

Sujeewa-Senasinghe

வரி மூலம் அறவிடப்படுகினிற தொகையில் 10 வீத வருமானம் மாத்திரமே கிடைக்கப்பெறுவதாகவும் இது வங்கரோத்து அடைந்த நாடுகளில் காணப்படுகின்ற வருமானம் எனவும் அவர் இதன் போது குறிப்பிட்டார்.

10 வீதமானக காணப்படுகின்ற வரி வருமானத்தை 20 வீதமாக அதிகரிக்க வேண்டும் என அமைச்சர் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

தற்போது காணப்படுகின்ற வரிக் கட்டமைப்பின் அடிப்படையில் 20 வீதம் வரி வருமாகம் கிடைக்கப்பெற வேண்டும் என பொருளாதார வல்லுனர்கள் சுட்டிக்காட்டியதாகவும் இதற்கிடையில் இடைவெளி காணப்படுகின்ற இடம் குறிதது கண்டறியப்பட வேண்டும் எனவும் பொருளாதார வல்லுனர்கள் சுட்டிக்காட்டியதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை அவுஸ்திரேலியாவின் வர்த்தகர் ஜோரஜ் சொரொஸின் இலங்கை விஜயம் குறித்து பல தரப்பினரும் கருத்து வெளியிடுவதாகவும் அவரிடமிருந்து தேவையனதை மாத்திரமே பெற்றுக்கொள்வதாகவும் அவர் இந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.

இதேவேளை அரசியலமைப்பு திருத்தத்தில் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொள்ள முடியும் என அரச தொழில்முயற்சிகள் பிரதி அமைச்சர் இரான் விக்ரமரத்ன இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க அரசியலமைப்பு திருத்தத்திற்கான செயன்முறையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதோடு மக்களின் அபிப்பிராயங்களைப் பெற்று மக்களுக்கு தேவையான முறையிலே அரசியலமைப்பு மாற்றம் மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்களை குறைத்து ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதியும் நிறைவேற்றப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.