இலங்கை அணியினரின் நடத்தை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது : தயாசிறி !

நியூஸிலாந்துக்கு சுற்றுலாவை மேற்கொண்டிருந்த இலங்கை கிரிக்கெட் அணி அங்கு நடந்து கொண்ட விதம் குறித்து செய்யப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என்று இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜெயசேகர இதனை தெரிவித்துள்ளார்.

thayasri

குறித்த சுற்றுலாவின் போது இலங்கையின் அணியினர் இரவு மதுபான விருந்துகளில் பங்கேற்றுள்ளனர்.

அத்துடன் அணிக்குள் வாக்குவாதங்கள் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்தநிலையில் நியூஸிலாந்து அணியுடனான கிரிக்கெட் போட்டிகளுக்கு முதல் வந்த இரவுகளில் இலங்கை அணியினர் மதுபான விருந்துகளில் பங்கேற்றமை தொடர்பான புகைப்படங்கள் அமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

இவற்றை பார்க்கும் போது இலங்கை அணியினரின் நடத்தை அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக அமைச்சர் தயாசிறி, வெளிநாட்டு செய்தி நிறுவனம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்

அணியின் வீரர்கள் அதிகாலை ஒருமணி வரையில் மதுபான விருந்துகளில் பங்கேற்றுள்ளனர்.

அத்துடன் அணிக்குள் பல பிளவுகளும் ஏற்பட்டுள்ளன என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் தலைவர் திலங்க சுமதிபாலவுடன் இணைந்து இலங்கை அணியினரை அழைத்து நியூஸிலாந்தில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து ஆராயவுள்ளதாக அமைச்சர் ஜெயசேகர தெரிவித்துள்ளார்.