கல்வியமைச்சரின் ஊடகவியலாளர் மாநாடு !

 

SAMSUNG CSC

அஷ்ரப் ஏ சமத்

கொழும்பு  ரோயல் கல்லுாாியில்  முதலாம் ஆண்டு மற்றும் மாணவா்கள்
அனுமதியின்போது மேலதிகமாக வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டு
சுற்றுநிருபத்திற்கு அப்பால் புதிய மாணவா்கள் சோ்க்கப்பட்டுள்ளதை
கல்வியமைச்சின் கணக்காய்வு அதிகாரிகள் கல்லுாாிக்கு  நேரடியாகச் சென்று
கண்டுபிடித்ததை யடுத்து  இன்று (12) முதல் ரோயல் கல்லுாாி அதிபா்
கல்வியமைச்சுக்கு மாற்றப்பட்டுள்ளாா்.   கல்வியமைச்சின் ஓழுக்காற்று குழு
மற்றும் கணக்காய்வு  விசாரனை மேற்கோண்டு  நடவடிக்கை எடுக்கும் வரை
ரோயல் அதிபா் கல்வியமைச்சில் இணைக்கப்பட்டுள்ளாா். என கல்வியமைச்சா்
தெரிவித்தாா்.

SAMSUNG CSC

கல்வியமைச்சில் இன்று (12) நடைபெற்ற ஊடகவியலாளா் மாநாட்டில்
கல்வியமைச்சா்  அகிலவிராஜ் காரியவாசம் தெரிவித்தாா்

SAMSUNG CSC

அவா் இங்கு மேலும் தகவல் தருகையில் –

அத்துடன் நாளை மருதினம் வியாழக்கிழமைக நாடு முழுவதும்  முதலாம்
ஆண்டுக்க்கான மாணவா்கள்  சோ்கப்பட உள்ளனா்.   அதில்  மருதானை ஆனாந்தாக்
கல்லுாாியிருந்தும்  முதலாம் ஆண்டு மாணவா்களது  225 கோவைகள் கொண்ட  சகல
தஸ்தவேஜூகளும்  அமைச்சுக் இன்று  கொண்டு ரப்பட்டுள்ளது. இதில் 43
மாணவா்கள்  கொழும்பு வாழ் முஸ்லீம் களது வீடுகளில்  சில பெற்றோா்கள்
வாழ்ந்து வருவதாகவும்  பதிவு செய்துள்ளனா், மற்றும் வாக்களாா் பதிவு
களினையும்  மேற்கொண்டுள்ளனா். இதே போன்று கண்டி கிங்ஸ் வுட் கல்லுாாிகள்
1 ஆம் ஆண்டு மாணவா்களது அனுமதியிலும்  மோசடி இடம்பெற்றுள்ளது.  இவ்வாறான
சம்பவங்கள் கண்டு பிடிக்கப்பட்டு   எதிா்காலத்தில் இந்த அதிபா்களுக்கு
எதிராக அமைச்சின் ஓழுக்காற்று விசாரனை மேற்கொண்டு நடவடிக்கை
எடுக்கபப்டும்.

 தேசிய பாடசாலைகள் 352 உள்ளன. அவற்றில்  100 பாடசாலையில் பதில் அதிபா்கள்
கடமையாற்றுகின்றனா். இந்த வருடத்திற்குள் தேசிய பாடசாலைகளில் அதிபா்கள
வெற்றிடத்திற்காக  நேர்முகப் பரீட்சை முடிவடைந்துள்ளது.  கல்விச் சேவை
ஆணைக்குழுவின் அனுமானத்துக்கு இனங்க எவ்வித அரசியல் தலையீடும்  இன்றி
கல்வித்தகமை 5 புள்ளிகள்  ஆசிரிய சேவைகளுக்கு 40 புள்ளிகள் மற்றும்
நிர்வாகம், மேலதிக தகமைகளுக்கு புள்ளி வழங்கி தேசிய பாடசாலைகளது
அதிபா்கள் தெரிவு செய்யப்பட உள்ளன.   மேலும் 4000 அதிபா்கள் இவ் வருடம்
சோ்த்துக் கொள்ளப்படுவதற்காக விண்ப்பங்கள் வர்த்தமானியில்
பிரசுரிக்கப்பட்டுள்ளன. அத்துடன் சகல பாசடாலைகளிலும் நிலவும் ஆசிரியா்
பற்றாக்குறை, ஊழியா்கள் சிற்றுாளியா்கள் ஆசிரியா்களை அந்தந்த மாவட்டம்
பிரதேச செயலாளா் பாடசாலைகளில் அந்த பிரதேச ஆசிரியா்கள் சோ்த்துக்
கொள்ளப்பட உள்ளனா்.

புலமைப்பரிட்சையில்  சித்தியெய்திய மாணவா்களது  6ஆண்டு அனுமதிக்கு ரோயல்
கல்லுாாி, ஆனந்தாக் கல்லுாாி, டி.எஸ் சேனாநாயக்க கல்லுாாி  போன்ற
பாடாசாலைகளில் மேலும் 40 மாணவா்கள் அதிகரிக்ப்படும். இதனால் ரோயல்
கல்லுாாியில் புலமைப்பரிசில் 184 புள்ளிகள் கடந்த வருடம் இருந்தன இம்முறை
183 புள்ளி பெற்றவருக்கும் சா்ந்தா்ப்பம் கிடைக்கும். தேசிய பாடசாலை 352
க்கும் நிர்வாகம் மற்றும் பராமரிப்புக்காக  வருடாந்தம் 100 இலட்சம்
வழங்கப்பட்டு வருகின்றது.  எதிா்காலத்தில் கல்வித்திட்டம் மாற்றம்
வரும்போது க.பொ.த. சாதரண தரம் சித்தியெய்யாத மாணவா்கள் அவா்களை வேறு
தொழில்நுட்பக் கல்வியில் ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
ஒருபோதும் அவா்கள் வீடுகளில் உறங்கிக் கிடக்க வேண்டியதில்லை.

அத்துடன் நாட்டில் உள்ள 98 வலயக் கல்விப்பணிமனைகளிலும் ஆசிரிய பயிற்சி
நிலையம் ஆரம்பிக்கப்படும். ஏற்கனவே 40 ஆசிரிய பயிற்சி நிலையம்
ஆரப்பிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுளது.
மலசல கூடம் இல்லாமல் இருந்த 500 பாடசாலைகளுக்கு 20 இலட்சம் ்வழங்கப்பட்டு
அவை நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.  ஒவ்வொரு பிரதேச செயலாளா் பிரிவிலும்
2 பாடசாலைகள் அபிவிருத்திக்கு தோ்ந்தெடுகக்பட்டுள்ளன. இதனை தெரிபு
செய்யதது. அந்த வலயக் கல்விப் பணிப்பாளா்களும் திட்டமிடல் பிரிவும் இதில்
எவ்வித அரசியலும் தலையீடு இடம் பெறவில்லை.