அண்மையில் யாழ் மாவட்டத்தில் மீள்குடியேறிய மக்களுக்கான நோர்வே அரசாங்கத்தின் உதவிகளை நீடிக்க ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் இலங்கைக்கான பிரதிநிதி ஜோரேன் சொர்என்சன் (Joern Soerensen) மற்றும் இலங்கைக்கான நோர்வேத் தூதுவர் ஆகியோர் குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
இந்த திட்டத்திற்கு அமைய அண்மையில் மீள் குடியேறியவர்களுக்கு நீதி கிடைப்பதற்கு ஏற்ற வகையில் சட்ட ஆலோசனைகள் மற்றும் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான ஒத்துழைப்பு என்பன வழங்கப்படும் என தெரியவந்துள்ளது.