அபிவிருத்தித் திட்டங்களை தங்கு தடையின்றி மேற்கொள்ள புதிய சட்டங்களை கொண்டுவரவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அலரி மாளிகையில் இன்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அபிவிருத்தித் திட்டங்களை தங்கு தடையின்றி மேற்கொள்ள வேண்டும். எனினும் தற்போதுள்ள சட்டங்கள் போதுமானதாக இல்லை.
எனவே அபிவிருத்தித்திட்டங்களை தங்கு தடையின்றி முன்னெடுக்கும் வகையில் அபிவிருத்தி ஏற்பாடுகள் சட்டமூலம் கொண்டு வரப்படவுள்ளது.
அபிவிருத்திகளை மேற்கொண்டு, நாட்டு மக்களின் பொருளாதாரத்தை உயர்த்துவதே இதன் அடிப்படை நோக்கம் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.