திலங்க சுமதிபாலவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க போவதாக அர்ஜூன ரணதுங்க தெரிவிப்பு !

 

arjuna

 

பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தி, தவறான கருத்துக்களை வெளியிட்டமையின் அடிப்படையில் கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபாலவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க போவதாக அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார். 

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

விடுதி ஒன்றை கட்டுவதற்கு அரசாங்கம் வழங்கிய காணியை விற்று அந்த பணத்தை நான் பையில் போட்டுக்கொண்டதாக திலங்க சுமதிபால கூறியுள்ளார். இதனை நீதிமன்றத்திற்கு சென்று சுமதிபாலவுடன் தீர்த்து கொள்கிறேன். 

மேலும் நான் தொப்பிகளை தயாரித்து விற்பனை செய்தாக கூறியுள்ளார். இதனையும் நான் நீதிமன்றத்தில் தீர்த்து கொள்கிறேன். காரணம் இந்த இரண்டு குற்றச்சாட்டுக்களும் பொய்யானவை என, அர்ஜூன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.