உயிர்களை தியாகம் செய்து சிறைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு பெற்றுக் கொடுக்கும் விடுதலை அவர்களை விடுதலைக்கு பின்னரும் குற்ற உணர்வுடன் வாழ வைக்கும் என ஜனாதிபதியினால் பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்யப்பட்ட சிவராசா ஜெனீகன் தெரிவித்துள்ளார்.
பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு இன்று யாழ்.வந்த ஜெனீகன் அரசியல் கைதிகள் விடுதலைக்காக உயிர்தியாகம் செய்த செந்தூரனின் வீட்டுக்கு சென்றிருந்த நிலையில் அங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு கூறினார்.
விடயம் தொடர்பில் மேலும் அவர் கூறுகையில், ஜனாதிபதியினால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டு நான் விடுதலை செய்யப்பட்டுள்ளேன். என்னோடு பல அரசியல் கைதிகள் சிறை வாழ்க்கை அனுபவிக்கின்றனர்.
இந்நிலையில் எமது விடுதலையை வலியுறுத்தி தனது உயிரை தியாகம் செய்த மானவனின் குடும்பதை நேரில் சந்திபதற்கு வந்துள்ளேன் இது எனது தனிபட்ட முடிவல்ல ஒட்டுமொத்த தமிழ் அரசியல் கைதிகளின் விருப்பம் நான் விடுதலையாகும் போது கட்டாயம் செந்தூரனின் வீட்டிற்கு செல்லவேண்டும் என்பதே.
அதனை என்னிடம் கூறினார்கள். இவ்வாறான உயிர்த் தியாகங்களின் ஊடான சிறைமீட்பு சரியானதல்ல. இதனால் நாம் விடுதலையாகியும் குற்ற உணர்ச்சியிலேயே எமது வாழ்வை தரும் என்றார்.