துறைமுக அதிகார சபையின் ஊடக நிறுவனத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக, பொதுச் சேவைகள் சங்கத்தின் தலைவர் சந்திரசிறி மஹகமகே தெரிவித்துள்ளார்.
நிதி மோசடி இடம்பெற்றதாக கூறியே குறித்த அலுவலகத்துக்கு துறைமுக அதிகார சபையின் விஷேட விசாரணைப் பிரிவு சீல் வைத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எதுஎவ்வாறு இருப்பினும், ஜனசது சேவா கிரிக்கெட் கழகத்தின் தலைவராக செயற்பட்டு வருபவரே துறைமுக அதிகாரசபையின் ஊடகப் பிரிவுக்கும் பிரதானியாக உள்ளதாகவும், அவருக்கு அமைச்சர் அர்ஜூன ரணதுங்கவால் அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும், இதற்கு அண்மையில் இலங்கை கிரிக்கெட் சபைக்கான தேர்தலில் இடம்பெற்ற விடயங்களும் காரணமாக இருக்கலாம் என சந்தேகம் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன் இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும், அமைச்சர் அர்ஜூன ரணதுங்க, துறைமுக அதிகாரசபையிலும் கிரிக்கெட் விளையாட அனுமதிக்கப்படமாட்டார் என்றும் சந்திரசிறி மஹகமகே மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் அதிகாரசபையின் பிரதான தகவல் தொடர்பாடல் அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக வௌியான செய்திகள் முற்றிலும் தவறானது என, துறைமுக அதிகார சபை கூறியுள்ளது.