ஹிருணிகாவின் ஆதரவாளர்கள் 8 பேரும் அடையாளம் காணப்பட்டு, பிணையில் விடுதலை!

நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகாவின் ஆதரவாளர்கள் 8 பேரால் தெமட்டக்கொடையில் இளைஞர் ஒருவர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் குறித்த 8 பேரும் இன்று புதன்கிழமை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் இடம்பெற்ற அடையாள அணிவகுப்பின் போது குறித்த 8 பேரும் அடையாளம் காணப்பட்டனர். 

hirunica-1

இவர்கள் 8 பேரையும் ஐந்து சாட்சிகள் அடையாளம் காட்டினர். 

இந்த அடையாள அணிவகுப்பை அடுத்து சந்தேகநபர்களை 100,000 ரூபா சரீர பிணைகளில் செல்ல நீதிவான் மொஹமட் மாஹிர் அனுமதி வழங்கினார். 

இதேவேளை இன்று மன்றில் முன்னிலையான அரச சட்டத்தரணி ஜனக பண்டார, இந்த சம்பவத்தின் ஏனைய சந்தேகநபர்கள் குறித்து சட்டமா அதிபர் இன்னும் அறிவுறுத்தல்கள் எதனையும் வழங்கவில்லை என்று குறிப்பிட்டார்.

இந்தநிலையில் வழக்கு விசாரணை, ஜனவரி 12 வரை ஒத்திவைக்கப்பட்டது.