நான் தான் பிரதமர், நான்தான் அரசாங்கம் எனக் கூறி தன்னிச்சையாக செயற்படும் பிரதமர் !

புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்க அரசாங்கம் கடைப்பிடிக்கும் வேலைத்திட்டம் குறித்து பாராட்ட முடியாது என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். 

Dinesh-e1372323163147_0

அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கல் சபை ஒன்றை நியமித்து புதிய அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்படுத்த அரசாங்கம் கையாண்டு வரும் வேலைத்திட்டம் குறித்து பாராட்ட முடியாது என்பதால், அது தொடர்பாக ஜனாதிபதியிடம் கருத்து கூற கூட்டு எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது. 

அடுத்த வரவு செலவுத்திட்டத்திற்கு முதல் இது சம்பந்தமாக பேச்சுவார்த்தை ஒன்றை வழங்கவில்லை எனில், அரசியலமைப்புச் சட்ட உருவாக்கல் சபை சம்பந்தமாக வாக்களிப்பது பற்றி கூட்டு எதிர்க்கட்சி கூடி தீர்மானம் ஒன்றை எடுக்கும். 

நான் தான் பிரதமர், நான்தான் அரசாங்கம் எனக் கூறி தன்னிச்சையாக செயற்படும் பிரதமரிடம் இது பற்றி கூறி பயனில்லை எனவும் தினேஷ் குணவர்தன கூறியுள்ளார்.