முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தேர்தலில் தோற்றாலும் கட்சியை விட்டுச் செல்லவில்லை !

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமது கட்சியின் வேட்பாளரின் வெற்றியடைய செய்ய வேண்டும் என்பதற்காக அரச ஊடகங்களையும் அரச நிறுவனங்களையும் பயன்படுத்தியதாக அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
S.B.Disanayake

எவ்வாறாயினும் தமது கட்சியின் வேட்பாளரான முன்னாள் ஜனாதிபதியும் குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மகிந்த ராஜபக்ச தோல்வியடைந்ததார் எனவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க இதனை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் அந்த தேர்தலில் சட்டவிரோத வேலைகளை செய்யவில்லை. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தேர்தலில் தோற்றாலும் கட்சியை விட்டுச் செல்லவில்லை.

மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் ஜனாதிபதியின் செலவுகள் பெருமளவில் குறைக்கப்பட்டன. 

வெளிநாடு பயணங்களை மேற்கொள்ளும் போது கடந்த காலங்களில் போல் அல்லாமல் ஜனாதிபதியுடன் வெளிநாடு செல்லும் நபர்களின் எண்ணிக்கையும் பெருமளவில் குறைக்கப்பட்டது எனவும் எஸ்.பி. திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.