தமிழ் மக்கள் அவை சரியானதா? பிழையானதா? அதன் நோக்கங்கள் சரியானதா? பிழையானதா? என விமர்சிப்பதற்கும் அப்பால் தமிழ் மக்கள் அவையில் உறுப்பினர்களாக உள்ளவர்களை தனிப்பட்ட முறையில் சில ஊடகங்கள் விமர்சித்துக் கொண்டிருப்பதாக, முன்னாள் நாடாளுமன்ற ஊறப்பினர் சுரேஷ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார்.
குறித்த பத்திரிகையாளர் சந்திப்பில் மேலும் அவர் குறிப்பிடுகையில், தமிழ் மக்கள் அவை உருவாக்கப்பட்டதன் பின்னர் மக்கள் அவை தொடர்பான விமர்சனங்களை முன்வைப்பதற்கும் அப்பால் சென்று சில ஊடகங்கள் மக்கள் அவையில் உள்ள சிலர் தொடர்பாக தனிப்பட்ட பழைய விடயங்களை சுட்டிக்காட்டி விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
குறிப்பாக கடந்த வரும் தமிழ் மக்களுக்கான தீர்வு திட்டம் தொடர்பில் மக்கள் கருத்துக்களை அறிந்திருந்தோம். அதற்கு என்ன நடந்தது? என சிலர் கேள்வி எழுப்பியிருக்கின்றார்கள்.
ஆம் எமது கருத்தறியும் செயற்பாட்டில் 180 வரையான கருத்துக்கள் கிடைக்கப் பெற்றிருந்தன. அவ ற்றை மக்கள் அவை உருவாக்கியிருக்கம் தீர்வு திட்டம் தொடர்பான உப குழுவிடம் சமர்ப்பிப்பதற்கு நாங்கள் தற்போது முயற்சித்திருக்கின்றோம். மேலும் நாங்கள் தோற்று போனவர்கள் என கூறுவதற்கே சிலர் தொடர்ந்தும் முயற்சிக்கின்றனர்.
ஆனால் நாங்கள் தோற்கவில்லை. திட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டுள்ளோம். நாங்கள் பெற்றிருப்பதாக கூறப்பட்ட வாக்குகளை காட்டிலும் அதிகளவு வாக்குகளையே பெற்றோம்.
ஆனால் அது சிலருக்குப் பகிர்ந்து கொடுக்கப்பட்டுள்ளது. அதில் யார் எல்லாம் சம்மந்தப்பட்டுள்ளார்கள்? என்பன போன்ற தகவல்களை நாங்கள் பெற்றிருக்கின்றோம் என்றார்.
முதலமைச்சர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்.
வடமாகாண முதலமைச்சர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவதற்கு முயற்சிக்கப்படுகின்றது.
குறிப்பாக தமிழ்தேசிய கூட்டமைப்பில் பிரதான அங்கத்துவம் பெற்றிருக்கும் ஒரு கட்சியின் உறுப்பினர்களே இவ்வாறான முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றனர். இந்த திட்டம் தொடர்பாக அவர்கள் தமக்கு சாதகமான உறுப்பினர்கள் சிலருடன் பேசிய விடயங்கள் தற்போது எமக்கு கிடைக்கப் பெற்றிருக்கின்றன.
நாம் இதனை எழுந்தமானமாக கூறவில்லை. மாறாக எமக்கு கிடைக்கப் பெற்ற உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களின் அடி ப்படையிலேயே கேட்கிறோம். மேலும் முதலமைச்சர் வேட்பாளராக முதலமைச்சர் நிறுத்தப்பட்டபோது கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகள் அனைத்தும் இணைந்து அனைவரினதும் ஒத்துழைப்புடனேயே முதலமைச்சரை கொண்டுவந்தோம்.
நிலை இவ்வாறிருக்க அங்கத்துவ கட்சிகளின் ஒன்று தாங்கள் நினைத்தவாறு தங்கள் முடிவுகளுக்கு அமைவாக தீர்மானங்களை எடுப்பதும், செயற்படுவதும் முறையற்றது. முதலமைச்சர் மீது நம்பிக்கை யில்லா தீர்மானம் கொண்டுவருவதானால், எதற்காக? கொண்டுவரப்படவேண்டும். என்ற விடயம் தொடர்பாக கூட்டமைப்பு அங்கத்துவக் கட்சிகளை அழைத்து விவாதித்திருக்கவேண்டும். ஆனால் அவ்வாறு செய்யாமல் தாங்கள் நினைத்தவாறெல்லாம் செய்ய முடியாது. என அவர் மேலும் தெரிவித்தார்.
நெல்சிப் திட்ட ஊழல் தொடர்பில்,
கடந்த வருடம் நெல்சிப் திட்டத்தில் இடம்பெற்றிருந்த ஊழல்கள் தொடர்பாக நான் சுட்டிக்காட்டியி ருந்ததுடன், இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவிற்கும் முறைப்பாடு கொடுத்திருந்தேன். இதனடிப்படையில் குறித்த முறைப்பாடுகள் தொடர்பாக என்னிடம் விளக்கம் கேட்பதற்கு நாளை கொழும்பு வருமாறு
ஆணைக்குழு எனக்கு அழைப்பு விடுத்துள்ளது.
மேற்படி விடயம் தொடர்பாக வடமாகாணசபையும் ஒரு விசாரணை நடத்தி நிறைவு செய்திருப்பதாக அறிய முடிகின்றது.
இந்நிலையில் நான் முறைப்பாடு கொடுத்தவன் என்ற அடிப்படையில் என்னிடம் தகவல் அறிவதற்காகவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் காணி விடுவிப்பு தொடர்பாக,
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா வடக்கு மக்களுடைய காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக் கைகள் எடுக்கப்படும் என தெரிவித்திருக்கின்றார். இந்நிலையில் எந்த மக்கள் எங்கிருந்து இடம்பெ யர்ந்தார்களோ, அந்த மக்கள் அந்த இடங்களிலேயே குடியேற்றப்படவேண்டும். என்ற விடயத்தை நா ங்கள் இறுக்கமாக கடைப்பிடிக்கின்றோம்.
இந்நிலையில் வலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயம் உள்ளிட்ட வடமாகாணத்தில் படையினர்வசம் உள்ள தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகள் முழுமையாக விடுவிக்கப்பட்டு மக்கள் தங்கள் சொந்தக் காணிகளில் மீள்குடியேற்றப்படவேண்டும். அதற்குரிய நடவடிக்கைகள் முழுமையாக எடுக்கப் படவேண்டும். காணிகளை விடுவிப்பேன் என்ற ஜனாதிபதியின் கருத்தை வரவேற்கும் நாங்கள் இடம்பெயர்ந்த மக்களுக்கு அவர்களுடைய சொந்தக் காணிகள் வழங்கப்படவேண்டும். மாற்றக் காணிகள் வழங்கப்படக்கூடாது என்ற விடயத்தை நாங்கள் இறுக்கமாக பின்பற்றுவோம் எனவும் அவர் கூறியுள்ளார்.