தற்போது இலங்கை நாடானது சுற்றுலாத்துறைக்கு ஏற்றதொரு இடமாக விளங்குவதுடன், கடந்த ஆண்டில் மட்டும் 1.8 மில்லியன் சுற்றுலாப் பிரயாணிகள் நமது நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தகவல் வழங்கியுள்ளது.
2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடும் போது 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நாட்டுக்கு வருகை தந்த சுற்றுலாப் பிரயாணிகளின் எண்ணிக்கை 15.4 சதவீதத்தினால் அதிகரித்து காணப்படுகிறது.
அதாவது சுற்றுலாப் பிரயாணிகளின் எண்ணிக்கை 178,672 இலிருந்து 206,114 எண்ணிக்கையாக அதிகரித்துள்ளது.
வருடம் முழுவதிலும் வருகை தந்துள்ள சுற்றுலாப் பிரயாணிகளின் எண்ணிக்கையை நோக்குமிடத்து 2014 ஆம் ஆண்டில் வருகை தந்த சுற்றுலாப் பிரயாணிகள் 1,527,153 எண்ணிக்கையிலிருந்து 1,798,380 எண்ணிக்கையாக அதிகரித்துள்ளதுடன்,
இந்த அதிகரிப்பானது சுமார் 17.8 சதவீத வளர்ச்சியைக் காட்டி நிற்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.