சிசிடிவி காட்சிகளை வெளிநாட்டுக்கு அனுப்பி பரிசோதிப்பது சிறந்தது !

 

றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜூடின் மரணமடைந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் சிசிடிவி காட்சிகளை, வௌிநாட்டு நிறுவனத்துக்கு அனுப்பி பரிசோதிப்பது சிறந்தது என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

THAJUDEEN

கொழும்பு பல்கலைக்கழக கனணிப் பிரிவினரால் இன்று (05) இந்த விடயம் நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் கோரிக்கைக்கு அமைய, கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸால், தாஜூடினின் வாகனம் மற்றும் அதற்கு பின்னால் செல்லும் வாகனங்கள் அடங்கியதாக கூறப்படும் சிசிடிவி காட்சிகளை கொழும்பு பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

இதன்படி குறித்த வாகனங்கள் செல்லும் காட்சியை காணக்கூடியதாக உள்ளதாகவும் எனினும் வாகன இலக்கங்களையோ அதில் பயணிக்கும் நபர்களையோ அடையாளம் காணமுடியாதுள்ளதாகவும், கொழும்பு பல்கலைக்கழக கனணிப் பிரிவின் பிரதிநிதிகள் நீதிமன்றில் குறிப்பிட்டுள்ளனர். 

எனவே குறித்த காட்சிகளை அமெரிக்காவின் எப்.பீ.ஐ அல்லது இங்கிலாந்தின் ஸ்கொட்லான்யாட்டுக்கு அனுப்பி வைத்து பரிசோதனை செய்வது, மிகவும் சிறந்தது என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.