நோர்வேயின் வெளியுறவு அமைச்சர் போர்ஜ் பிரேன்ட்ஸ் இவ்வாரம் இலங்கை வருகை !

நோர்வேயின் வெளியுறவு அமைச்சர் போர்ஜ் பிரேன்ட்ஸ் இந்த வாரத்தில் இலங்கை வரவுள்ளார்.
images

இலங்கையுடன் மீண்டும் அரசியல் தொடர்புகளை புதுப்பித்துக் கொள்ளும் வகையிலேயே இந்த பயணம் அமையவுள்ளது என்று அவரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

போரின் போது இரண்டு தரப்புகளுக்கும் இடையில் இணக்கம் ஒன்றை கொண்டு வர நோர்வே சுமார் 10 வருடங்கள் முயற்சி மேற்கொண்டும் அது தோல்வியடைந்தது. 

இந்தநிலையில் நோர்வேயின் வெளியுறவு அமைச்சர் போர்ஜ் பிரேன்ட்ஸ் (Borge Brendes) எதிர்வரும் வியாழக்கிழமையன்று இலங்கைக்கு வருகைதரவுள்ளார். 

அண்மைக்கால அரசியல் நிலவரங்களின் அடிப்படையில் இலங்கையுடன் அரசியல் ரீதியான தொடர்புகளை பேண உரிய தருணம் இதுவென்று அவர் குறிப்பிட்டுள்ளார். 

போர்ஜின் இலங்கை பயணமானது, 2006ம் ஆண்டுக்கு பின்னர் நோர்வேயின் அமைச்சர் ஒருவர் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதல் பயணமாக அமையவுள்ளது 

இலங்கைக்கு வரும் நோர்வேயின் வெளியுறவு அமைச்சர் ஜனாதிபதி மைத்திரிபால, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் எதிர்க்கட்சி தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன் ஆகியோரை சந்திக்கவுள்ளார்