தற்காலிக இடமாற்றம் பெற்ற ஆசிரியர்கள் உடனடியாகத் திரும்ப வேண்டும் : கல்விப் பணிப்பாளர்

 

அசாஹீம் 

மட்டக்களப்பு – கல்குடா கல்வி வலயத்திலிருந்து தற்காலிக இடமாற்றம் பெற்று வேறு வலயங்களில் கடமையாற்றும் அனைத்து ஆசிரியர்களும் உடனடியாக வலயத்துக்கும் திரும்ப வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் அவர்களுக்கான சம்பளம் இடை நிறுத்தப்படும் என்றும் கல்குடா வலயக்கல்விப் பணிப்பாளர் எஸ்.சிறிகிருஸ்ணராஜா அறிவித்துள்ளார்.

zde Kalkudah

இந்த தற்காலிக இடமாற்றங்களைப் பெற்றுக் கொண்ட ஆசிரியர்கள் இவ்வருடம் முதலாம் தவணை ஆரம்பித்த 4ஆம் திகதியே கடமைக்குத் திரும்பியிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு எமது வலயத்துக்குக் கடமைக்கும் திரும்பாவிட்டால் அவர்கள் உடனடியாக வருகையை உறுதிப்படுத்திக் கோள்ளுமாறும் வலயக்கல்விப் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண ஆளுனரின் அறிவுறுத்தலுக்கமைவாக இனிமேல் எந்தவித தற்காலிக இடமாற்றங்களும் வழங்கப்படமாட்டாது என்னும் அவர் அறிவித்துள்ளார்.

அத்துடன், இடைநிலைப்பாடசாலைகளில் கற்பிக்கும் அனைத்து ஆரம்பப்பிரிவு நியமனம் பெற்ற ஆசிரியர்களும் ஆரம்பப்பிரிவுப்பாடசாலைகளுக்கு செல்ல வேண்டும். அவர்களுக்கான பயிற்சிகளுக்கான ஏற்பாடுகளை கல்குடா வலயம் மேற்கொண்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.