தென்கிழக்குப் பல்கலைக்கழக பொறியில் பீட பிரச்சினைக்கு தீர்வு!

 
 
பி. முஹாஜிரீன்
தென்கிழக்குப் பல்கலைக்கழக பொறியியல் பீட மாணவர்கள் மேற்கொண்டு வந்த வகுப்பு பகிஷ்கரிப்பு நடவடிக்கைகளை முடிவக்குக் கொண்டுவந்து கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடப் போவதாகவும் இலங்கையில் முதல் தர பொறியியல் பீடமாக இப்பல்கலைக்கழக பொறியியல் பீடத்தை மாற்றுவதற்கு முயற்சிக்fப்போவதாகவும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
 
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட மாணவர்கள் மேற்கொண்ட வகுப்பு பகிஷ்கரிப்பை முடிவுறுத்தும் வகையில் பல்கலைக்கழக மானிய ஆணைக்குவினரும் பல்கலைக்கழக நிருவாகத்தினரும் மாணவப் பிரதிநிதிகளும் கலந்து கொண்ட விசேட உயர்மட்டக் கலந்துரையாடல் இன்று (05) செவ்வாய்க்கிழமை ஒலுவில் வளாகத்தில் நடைபெற்றது.
DSCN4535_Fotor_Collage m_Fotor
தேசிய நாளிதழ்கள் மற்றும் இலத்திரனியல் நிறுவனங்களின் ஊடகப் பிரதானிகளின் பங்குபற்றுதலுடன் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொகான் டி சில்வா தலைமைதாங்கி கருத்துத் தெரிவிக்கையில்,
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன் கல்வி நடவடிக்கைகளும் நாளை (06) ஆரம்பமாகவுள்ளன. இப்பல்கலைக்கழக பொறியில் பீடம் மூடப்படவோ வேறு பல்;கலைக்கழகங்களுடன் இணைக்கப்படவோ மாட்டாது. 13 வருடங்களாக இயங்கி வருகின்ற இப்பல்கலைக்கழகம் பல முன்னேற்றங்களை கண்டு வருகிறது. இங்கு போதிய இடவசதிகளும் ஏனைய பல வசதிகளும் காணப்படுவதுடன் ஒரு அபிவிருத்தியடைந்த பல்கலைக்கழகமாக மாறி வருகிறது.  
ஆனால் இங்குள்ள பொறியியல் பீடத்தில் பிரதானமாக விரிவுரையாளர் தொடர்பான பிரச்சினை அடங்கலாக ஏனைய பல்கலைக்கழகங்களில் காணப்படுவதைப் போன்ற சில பிரச்சினைகளும் காணப்படுகின்றன. தென்கிழக்குப் பல்கலைக்கழக பொறியியல் பீடத்தில் நிலவுகின்ற விரிவுரையாளர் பிரச்சினை மற்றும் இதர பிரச்சினைகளில் முதற்கட்டமாக தற்காலிகமாக விரிவுரையாளர்கள் நியமிப்பதற்கு தீர்வு காணப்பட்டுள்ளது. தற்போது நிலைமைகள் சீராக்கப்பட்டள்ளன. மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் பங்குபற்ற சம்மதம் தெரிவித்துள்ளனர். எதிர் காலத்தில் ஏனைய சகல பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வு காணப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.
 
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மாணவர் தரப்பு பிரச்சினைகளை இனங்கண்டுள்ளது. இது தொடர்பாக எமது ஆணைக்குழுவினால் பேராசிரியர் கபில பேரேரா நியமிக்கப்பட்டு இது தொடர்பான தகவல்களையும் அறிக்கைகளையும் பெற்றுள்ளோம். இறுதியாக இப்பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு ஒரு திட்டத்தை வகுத்துள்ளோம். சில நிரந்தர தீர்வுகளையும், சில மத்தியதர தீர்வுகளையும் சில தற்காலிக தீர்வுகளையும் கண்டுள்ளோம். நாங்கள் படிப்படியாக இங்குள்ள பிரச்சினைகளைத் தீரப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றோம். பதவி உள்ளீர்ப்பு நியதிகளுக்கமைய 4 கலாநிதிகளை நியமிக்க நடவடிக்கை எடக்கப்பட்டுள்ளது. இப்போதைக்கு சிறப்பான கற்றலை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 
இப்பல்கலைக்கழகத்தின் பொறியில் பீடத்திலுள்ள சில முக்கிய சாதனங்களும் இயந்திரங்களும் ஏனைய சில வசதிகளும் இலங்கையின் எந்தப் பல்கலைக்கழகத்திலுமில்லாத வகையில் காணப்படுகின்றன. இப்பொறியியல் பீடத்தை இலங்கையில் ஒரு முன்மாதிரியான பீடமாக கொண்டு செல்வதற்கும் இதனை சிறந்த முறையில் அபிவிருத்தி செய்வதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளோம். இதற்கு மாணவர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.
 
மாணவர்கள் சார்பாக மாணவர் பிரதிநிதி அசான் அங்கு கருத்துத் தெரிவிக்கையில், எங்களது வகுப்பு பகிஷ்கரிப்பைக் கைவிட்டு உடனடியாக வகுப்புகளுக்கு செல்லவுள்ளோம். எங்களது கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித் தருவதற்கு மிக விரைவில் அதற்கான உறுதி மொழியை வழங்க வேண்டும்.
 
அத்துடன் விரிவுரையாளர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்பொழுது தற்காலிகமாக பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளதுடன் ஏனைய வசதிகள் செய்து தருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதால் எமது பகிஷ்கரிப்பைக் கைவிட்டுள்ளோம். சில பௌதிக வளப் பிரச்சினைகளும் மாணவர் நலன்சார் பிரச்சினைகளும் உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டும். ஒவ்வொரு வருகை தர விரிவுரையாளர்களுக்கும் ரூபா ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் வழங்கி கற்பிப்பதற்க நடவடிக்கை எடுக்கப்பட்டள்ளதை வரவேற்கின்றோம்.
மேலும் எமது பல்கலைக்கழகத்திலிருந்து வெளியாகும் பொறியியலாளர்களுக்கு ஐ.ஈ.எஸ்.எல். அனுமதி உட்பட ஏனைய பொறியியல்சார் நிறுவனங்களும் அனுமதி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். தரமான கல்வியும் போதிய வசதிகளும் செய்து தரப்படும்போது நாங்கள் ஒத்துழைப்பு வழங்குவோம். எமக்கு எமத உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்கு நாம் தடைகளை எதிர் கொள்ளக்கூடாது எனக்கூறினார். 
 
இம்மாநாட்டில் உப வேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுதுவின் உதவித் தலைவர் பேராசிரியர் பி.எஸ்.எம். குணரட்ண, பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்ட தென்கிழக்குப் பல்கலைக்கழக அபிவிருத்தி இணைப்பாளர் பேராசிரியர் கபில பெரேரா, உட்பட விரிவுரையாளர்களும் பீடாதிபதிகளும் மாணவப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தனர்.
 
இங்கு பொறியியல் பீடத்திலுள்ள ஆய்வுகூட வசதிகள், சாதனங்கள், இயந்திர தொழிநுட்ப வசதிகள் உட்பட அனைத்து வசதிகளும் ஊடகவியலாளர்களுக்கு காண்பிக்கப்பட்டன.
 DSCN4535_Fotor_Collage_Fotor