சப்றின்
கடந்த அரசாங்கத்தில் சிறுபான்மை மக்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பதனை முன்னிறுத்தி அரசியலில் அடையாளம் கண்டு கொள்ளப் பட்டவர்கள் கரையான் போன்று சிறுபான்மை மக்களின் எதிகாலத்தை அளிக்கும் இவ்விடயங்களில் அக்கறை கொள்ளாமல் தமது இருப்புக்களை இன்னமும் காப்பாற்றிக் கொள்வதற்காக மாநகர அபிவிருத்தியையும் சிறைக்கைதிகளின் விடுதலையையும் வில்பத்து காடளிப்பையும் முன் நிறுத்தி பிச்சைக் காரன் புண் போன்று பாதுகாத்து வருகின்றனர் என அக்கரைப்பற்று மாநகரசபையின் முன்னாள் உறுப்பினர் எஸ்.எம்.சபீஸ் கூறினார்.
அக்கரைப்பற்றில் இடம்பெற்ற கல்வியலளர்கள் சந்திப்பின் போதே மேற்படி கூறினார்.
அவர் தொடர்ந்து கூறுகையில் – மக்கள் தாம் விரும்பிய தலைவர்களை கல்வித் தராதரம் பாராமல் தெரிவு செய்யக்கூடிய நிலைமை எமது அரசியல் சாசனத்தில் இருந்தாலும் அரசியல் தலைவர்களை கட்டுப் படுத்தி நாட்டை நிருவகிக்கக் கூடிய விதத்தில் கல்வியலாளர்களைத் தெரிவு செய்வதனையும் அரசியல் சாசனம் உறுதிப்படுத்துகிறது
அந்தவகையில் இலங்கை நிருவாக சேவை,இலங்கை வெளிநாட்டுச் சேவை,இலங்கை கல்வி நிருவாக சேவை, இலங்கை அதிபர் சேவை மற்றும் பல பரீட்சைகளை நடாத்தி தகுதியானவர்களை அடையாளம் கண்டு உரிய துறைக்கு நியமிப்பதன் மூலம் நாட்டின் நிருவாகமும் மக்களின் வரிப்பணமும் வீணாகாத முறையில் ஒழுங்கமைப்பு செய்யப்பட்டுள்ளதோடு மக்களுக்கு பொறுப்புக் கூறக்கூடியவர்களாக இவர்கள் காணப்படுகின்றார்கள்.
இதில் உச்ச பதவியான ஜனாதிபதி செயலாளர் பதிவி வரை செல்லக்கூடிய பரீட்சையாக இலங்கை நிருவாக சேவை பரீட்சை காணப்படுகிறது. இப்பரீட்சை முடிவுகள் 1993ம் ஆண்டிற்கு முன்னர் விகிதாசார முறையில் தெரிவு செய்யப்பட்டதனை இவ்விடத்தில் நினைவு படுத்திப்பார்க்க வேண்டும். கடந்த அரசாங்கத்தில் நடைபெற்ற இலங்கை நிருவாக சேவை பரீட்சையில் சித்தி பெற்றவர்களில் 1 முஸ்லிமும் 1 தமிழரும் அடங்கி இருந்தனர்.
நல்லாட்சி அரசாங்கத்தில் 1 முஸ்லிமும் 2 தமிழர்களும் தெரிவு செய்யப் பட்டுள்ளனர். இக் குறைபாடு ஏனைய திட்டமிடல் சேவை, கணக்காளர் சேவை மற்றும் ஏனைய சேவைப் பிரிவுகளிலும் தொடர்வதனை அவதானிக்க முடிகிறது. இத் தெரிவானது நல்லாட்சியிலும் சிறுபான்மை மக்களுக்கு விமோட்சனம் இல்லை என்பதனை எடுத்துக் காட்டுகிறது அதாவது இம்முறை இலங்கை நிருவாக சேவை பரீட்சையில் சித்தி பெற்று நேர்முகப் பரீட்சையில் தேர்வு பெற்ற 47 பேரில் சிறுபான்மை மக்களின் விகிதாசாரத்துக்கு ஏற்ப 9 பேர் வழங்கப் பட்டிருக்க வேண்டும் மாறாக 3 பேர் மாத்திரமே தெரிவு செய்யப் பட்டுள்ளனர்.
இருமுறை இலங்கை நிருவாக சேவை பரீட்சையில் சித்தி பெற்ற சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர்கள் நேர்முகப் பரீட்சையில் இரண்டு முறையும் தோல்வியுற்றுள்ளனர் இந்நேர்முகத் தேர்வுகளுக்குள் அரசியல் தலையீடுகள் இருக்குமா? இல்லையா? என்பதனை மக்கள் அறிவார்கள் . கடந்த அரசாங்கத்தில் சிறுபான்மை மக்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பதனை முன்னிறுத்தி அரசியலில் அடையாளம் கண்டு கொள்ளப் பட்டவர்கள் கரையான் போன்று சிறுபான்மை மக்களின் எதிகாலத்தை அளிக்கும் இவ்விடயங்களில் அக்கறை கொள்ளாமல் தமது இருப்புக்களை இன்னமும் காப்பாற்றிக் கொள்வதற்காக மாநகர அபிவிருத்தியையும் சிறைக்கைதிகளின் விடுதலையையும் வில்பத்து காடளிப்பையும் முன் நிறுத்தி பிச்சைக் காரன் புண் போன்று பாது காத்து வருகின்றனர்
நமது முன்னோர்களில் ஒருத்தரான சட்டத்தரணி அசீஸ் என்பவர் தமிழ் பேசினாலும் முஸ்லிம்கள் வேறு இனம் அவர்களின் பிரதிநிதி ஒருத்தர் சட்ட உருவாக்கல் சபைக்கு சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என்று 1800 களில் குரல் கொடுத்ததன் விளைவே இன்று ஆட்சி அதிகாரத்தை மாற்றி அமைக்கும் வல்லமையை முஸ்லிம் சமூகம் பெற்றுக் கொண்டது என்பதனை நாம் நினைவில் கொள்ள வேண்டும்
இவ்விடயத்தில் தமிழ் முஸ்லிம் தலைமைகள் ஒன்று பட்டு அரசிடம் பேச வேண்டும் இந்த அரசாங்கத்தை கொண்டு வந்ததில் முழுமையான பங்களிப்பு சிறுபான்மைக் கட்சிகளுக்கு இருப்பதனால் இவ்வாய்ப்பினை தவறவிடாமல் பயன்படுத்தி நமது சமூகத்துக்கான உரிமையினைப் பெற்றுக்கொள்வதற்கு எத்தனிக்க வேண்டும் என எஸ் எம் சபீஸ் கேட்டுக் கொண்டார்.