தவத்தின் உரைக்கு அஸ்மியின் மறுப்பறிக்கை !

thavam asmy

முஸ்லீம் சமூகம் ஒட்டுமொத்தமாக தனது வாக்கு பலத்தை பயன்படுத்தி உருவாக்கிய நல்லாட்சி அரசுக்கு ஒரு வருடகாலம் நிறைவு பெறும் தருணத்தில் அந்த சமூகத்தினுடைய எந்த ஒரு அபிலாசையும் நிறைவேற்றபடவில்லை என்பதானதும் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்கு ஒரளவு தீர்வு காணப்பட்டிருக்கிறது என்பதும் நல்லாட்சியினை பெறுத்த விடயமல்ல.

அதனை பெற்றுக்கொள்ள அந்தந்த சமுகம்சார் தலைவர்களும், பிரச்சினைக்குரிய பிரதேசங்களின் பிரதிநிதிகளும் எவ்வாறான முயற்சிகளையும் செய்திருக்கிறார்கள் என்பதிலே தங்கி இருக்கிறது.வெறுமனே
பிரச்சினைகுரிய மக்களை திருப்திப்படுத்த ஆட்சியை கடிந்து கொள்வது சந்தர்பவாத அரசியலாகும்.
தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் உரிய முறையிலே  அனுகி சர்வதேச புலம்பெயர் மக்களுடைய செல்வாக்கிலே தமிழ் தேசிய கூட்டமைப்பினர் உரிய முறையிலே செயலாற்றி வருகிறார்கள். அவர்களது செயற்பாடுகள் தொடர்பான திட்டமிடல்கள், செயலாற்றுகின்ற விதம் வெளிப்படையானது.

அவர்களது சமுகத்துக்காக பேசுகிறார்கள். ஓரளவெனும் அவை நடைமுறைப்
படுத்தப்படுகிறது.இன்று நல்லாட்சி யில் முஸ்லீம்களின் புறக்கணிப்பு தொடர்பான 
பேசுகிறார்கள்.தேசியபட்டியலுக்காக, அமைச்சு பதவிக்காக, ஜனாதிபதி, பிரதமரை, சந்தித்ததை தவிர வேறு என்ன மக்களுடைய பிரச்சினைகாக சந்தித்திருக்கிறார்கள்.இதற்க்கு ஒரு உதாரணமாக அண்மையில் அம்பாரைக்கு விஜயம் மேற் கொண்ட ஒரு முஸ்லீம்கட்சியினுடைய தலைவரை
வட்டமடு விவசாயிகள் சந்தித்த போது  ஜனாதிபதியிடம் இது தொடர்பாக பேசுவேன் என்று கூறியிருப்பதானது   இன்னும் இது தொடர்பாக எதுவும் நிகழவில்லை என்பதாகும். கடந்த ஆட்சியின் போது நிர்க்கதிக்குள்ளான விவசாயிகள் என்று கூறுவதால் ஒன்றும் நிகழாது.இது தொடர்பாக உரிய நடவடிக்கை எதை எமது தலைவர்கள் மேற் கொள்கிறார்கள் என மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். 

முஸ்லீம்களுக்கு இவ்வாறான பிரச்சினைகள் இருக்கிறது அதை உரிய முறையில் தீர்வு பெற்றுக்கொடுக்க வேண்டும் என தலைவர்களே முயல வேண்டும்.அல்லது எந்தந்த வகையில் முயற்சிகள் மேற் கொண்டு நல்லாட்சி
நடைமுறைப்படுத்த வில்லை என்பதை கூற வேண்டும். வேறுமனே நல்லாட்சியில் ஒன்றும் நிகழவில்லை
என்பது மக்களை பூச்சியத்தால் பெருக்குகின்ற சந்தர்ப்பவாத அரசியலாகும். முதலாவதாக எமது தலைவர்கள் முஸ்லீம் மக்களினுடைய ஆயிரக்கனக்கான ஏக்கர் காணிகளை அரச நிறுவனங்கள் வசமிருப்பது தொடர்பில் மேற் கொண்ட நடவடிக்கை என்ன? 

பொத்துவில், வட்டமடு, திருகோணமலை மாவட்ட புல் மோட்டை மட்டக்களப்பு மாவட்ட காணிகள் தொடர்பில் அரச உயர்மட்டத்தினரிடம் இவர்கள் எத்தனை முறை பேசியிருக்கிறார்கள். இவர்களால் உருவாக்கப்பட்ட நல்லாட்சி யின் தலைவரிடம் பேசியிருக்கிறார்களா? மகிந்த அரசில் அதிகமான வாழ்வாதரமும், அபிவிருத்திகளும் இடம்பெற்றன.இதை விட அதிகமான சீமந்து பைக்கற்றுகளும் வழங்கப்பட்டன.என்பதையும் எமது தலைவர்கள் மறந்து விட வேண்டாம். எனவே உங்களது முயற்சி சரிவராமல்
போகுமானால் ஆட்சியை குறை கூறுங்கள். முயற்சியே செய்யாமல் சந்தர்பவாத அரசியலுக்காக ஆட்சியாளர்களை குறை கூற வேண்டாம். 

(தவத்தின் உரை )

https://lankafrontnews.com/?p=21358