பலாலி விமான நிலை­யத்தை சர்­வ­தேச விமான நிலை­ய­மாக மாற்­று­வ­தற்கு அர­சாங்கம் சம்­மதம்!

பலாலி விமான நிலை­யத்தை சர்­வ­தேச விமான நிலை­ய­மாக மாற்­று­வ­தற்கு அர­சாங்கம் சம்­மதம் தெரி­வித்­துள்­ளது. ஆனால், இதற்­காக மக்­களின் காணிகள் சுவீ­க­ரிக்­கப்­ப­ட­மாட்­டாது என இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்­சியின் தலை­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மாவை சேனா­தி­ராஜா தெரி­வித்தார்.
Unknown

இது தொடர்­பாக அவர் மேலும் தெரி­விக்­கையில், 

வடக்கு, கிழக்கில் நாம் பல்­வேறு அபி­வி­ருத்­தி­களை, பொரு­ளா­தார வல­யங்­களை எதிர்­பார்த்துக் கொண்­டி­ருக்­கின்றோம். அதற்­கான காலம் தற்­போது எட்­டி­யுள்­ளது. 

வடக்கில் குறிப்­பாக பலாலி விமான நிலை­யத்தை சர்­வ­தேச விமான நிலை­ய­மாக மாற்­று­வ­தற்கு பல்­வேறு தரப்­பி­னரும் சாத­க­மான கருத்­தி­லுள்­ளனர். ஆனால் அவ்­வாறு மாற்­று­வ­தற்கு மக்­களின் காணிகள் சுவீ­க­ரிக்­கப்­ப­டு­வதை நாம் விரும்­பவில்லை. 

இதனைத் தெளி­வு­ப­டுத்தி ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்க ஆகி­யோ­ருடன் பேச்­சு­வார்த்­தை­களில் ஈடு­பட்­டு ­வந்த நிலையில் தற்போது இணக்கம் காணப்­பட்­டுள்­ளது. 

குறிப்­பாக பலாலி விமான நிலை­யத்தை சர்­வ­தேச தரத்தில் மாற்­று­வ­தற்கு விமான ஓடு பாதைகள் உட்­பட பல அபி­வி­ருத்­தி­களைச் செய்­வ­தற்கு நிலப்­ப­ரப்பு தேவை­யாக உள்­ளது. 

இதற்­காக மக்­களின் காணிகள் சுவீ­கரிக்கும் நட­வ­டிக்­கைகள் நடை­பெற்­ற­ போதும் நாம் பல பேச்­சு­வார்த்­தை­களை நடத்­தி­யதன் பய­னாக மக்­களின் காணி­களை சுவீ­கரிக்­காது கடற்­க­ரை­யோ­ரங்­களில் மண்ணை நிரப்பி அதற்கு ஏற்ற சூழலை உரு­வாக்­கு­வ­தற்­கான திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளன. 

மேலும் இதற்கான திட்ட முன்மொழிவுகள் என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. வெகு விரைவில் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று உறுதியான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என்றார்.