தொழிற் பயிற்சிக்கு விண்ணப்பித்தோருக்கு 4 ஆம் திகதி முதல் நேர்முகப் பரீட்சைகள்!

JPEG Image (4644627) 
 
சப்னி (DVTC -Nintavur )
 
இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் அம்பாறை மாவட்டத்தில் உள்ள தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சிநெறிகளை தொடர்வதற்காக விண்ணப்பித்த இளைஞர், யுவதிகளுக்கான நேர்முகப் பரீட்சைகள் ஜனவரி 4ஆம் திகதி தொடக்கம் 8ஆம் திகதி வரை இடம்பெறும் என்று நிந்தவூரில் உள்ள மாவட்ட அலுவலகம் அறிவித்துள்ளது. 
 
அம்பாறை மாவட்டத்தில் தமிழ், முஸ்லிம் பிரதேசங்களில் உள்ள 11 தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சிநெறிகளை மேற்கொள்வதற்கு ஆர்வமுள்ளோரிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. அதற்கமைய முழுநேர பயிற்சிகளுக்காக விண்ணப்பித்திருந்தோர் கீழ்வரும் தினங்களில், உரிய ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட பயிற்சி நிலையங்களுக்கு சமூகமளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். 
 
இதன்படி அக்கரைப்பற்று தொழிற்பயிற்சி நிலையத்தில் உள்ள 3 பயிற்சிநெறிகளுக்காக விண்ணப்பித்த இளைஞர், யுவதிகளுக்கு ஜனவரி 4ஆம் திகதியும், சம்மாந்துறை பயிற்சி நிலையத்தின் 12 கற்கைகளுக்கு விண்ணப்பித்தோருக்கு 5ஆம் 6ஆம் திகதிகளிலும், சாய்ந்தமருது நிலையத்தில் உள்ள 3 பயிற்சிநெறிகளை தொடர விண்ணப்பித்தோருக்கு 5ஆம் 7ஆம் திகதிகளிலும் நேர்முகப் பரீட்சைகள் இடம்பெறும். 
 
அத்துடன் நிந்தவூர் மாவட்ட தொழிற்பயிற்சி நிலையம் (9 கற்கைகள்), ஆலையடிவேம்பு (2 கற்கைகள்) மற்றும் மத்தியமுகாம் (5 கற்கைநெறிகள்) ஆகிய தொ.ப.நிலையங்களில் நடாத்தப்படும் பயிற்சிநெறிகளுக்கான விண்ணப்பதாரிகளுக்கு ஜனவரி 6ஆம் திகதியும், திருக்கோவில் பயிற்சி நிலையத்தின் 4 பயிற்சிநெறிகளுக்கு 7ஆம் திகதியும், காரைதீவு நிலையத்தின் 6 கற்கைகளுக்கு 7 மற்றும் 8ஆம் திகதிகளிலும்,  கல்முனை தொழிற்பயிற்சி நிலையத்தால் நடாத்தப்படும் 4 பயிற்சிகளுக்கு 8ஆம் திகதியும் இந் நேர்முகப் பரீட்சைகள் இடம்பெறவுள்ளன. 
 
இது சம்பந்தமான அழைப்புக் கடிதங்கள் விண்ணப்பதாரிகளுக்கு தபாலில் அனுப்பப்பட்டுள்ளன. அக்கடிதங்கள் கிடைக்காதவர்களும் பொருத்தமான ஆவணங்களுடன் குறிப்பிட்ட தினத்தில் சமூகமளிக்கலாம் என்று மாவட்ட உதவிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். அவசியமேற்படும் பட்சத்தில், 0711211501 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக நிகழ்ச்சிட்ட உத்தியோகத்தரை தொடர்புகொண்டு மேலதிக விபரங்களை பெற்றுக் கொள்ளலாம்.