சுலைமான் றாபி
அரசாங்க நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு செயலாளரின் 24/2015ம் சுற்றுநிருபத்திற்கு அமைவாக 2016ம் ஆண்டு புதுவருடத்தினை முன்னிட்டு இன்று (01) காலை கல்முனை வீதி அபிவிருத்தி அதிகாரசபையில் அரசாங்க சேவை சத்தியப்பிரமாண நிகழ்வுகள் இடம்பெற்றன.
இதில் கல்முனை வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் நிறைவேற்றுப் பொறியியலாளர் ஏ.எம்.எம். ஜாபிரினால் அரசாங்க சேவை சத்தியப் பிரமாணம் மும்மொழியப்பட்டதோடு, அதிகாரசபையின் உத்தியோகத்தர்களாலும் இவ்வரச சேவை சத்தியப்பிரமாணமும் மும்மொழியப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.