இலங்கை- சீனா சுதந்திர வர்த்தக உடன்பாடு தொடர்பாக அடுத்த ஆண்டு பேச்சு நடத்தப்படும் : கோ ஹுசெங்

இலங்கையுடன் சுதந்திர வர்த்தக உடன்பாடு செய்து கொள்வது தொடர்பாக அடுத்த ஆண்டு பேச்சு நடத்தப்படும் என சீன வர்த்தக அமைச்சர் கோ ஹுசெங் தெரிவித்துள்ளார்.
Unknown

சீனாவின் சின்ஹூவா செய்தி நிறுவனத்திற்கு கருத்து வெளியிட்ட அவர்,

பூகோள சந்தையில், விற்பனை வழிகளைக் கையாள வசதியாக, சீன நிறுவனங்கள் வெளிநாடுகளில் முதலீடு செய்வதற்கு ஊக்கம் அளிக்கப்படுகின்றது.

அதன்படி, அடுத்த ஆண்டில் தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் விரிவான பிராந்திய பொருளாதாரக் கூட்டு உடன்பாட்டைச் செய்து கொள்வது குறித்தும், இலங்கை மற்றும் மாலைதீவுடன் சுதந்திர வர்த்தக உடன்பாடு செய்து கொள்வது குறித்தும், பூகோள பங்காளர்களுடன் வலுவான வர்த்தக முதலீட்டு உறவுகளை கட்டியெடுத்துவதற்கும் பேச்சுக்கள் நடத்தப்படும் என்றார்.