ஜனவரி மாதம் முதலாம் வாரத்தை, நல்லாட்சி வாரமாக அனுஷ்டிப்பதற்கு தீர்மானம் : அமைச்சர் ராஜித

ஜனவரி மாதம் முதலாம் வாரத்தை, நல்லாட்சி வாரமாக அனுஷ்டிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரவித்துள்ளார்.
images

அரசாங்க தகவல் திணைக்களத்தில்  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.

நாட்டில் நல்லாட்சி அரசாங்கம் ஆட்சியமைத்து ஜனவரி மாதம் எட்டாம் திகதியுடன் ஒரு வருடம் பூர்த்தியாகிறது.

இந்நிலையில் கருத்து வெளியிட்ட அவர்,

நல்லாட்சி வாரத்தில் ஆடம்பரமான ஏற்பாடுகளை தவிர்த்து, மக்களுக்கு நன்மை பயக்கக்கூடிய வகையிலான திட்டங்களை முன்னெடுப்பதற்கு அமைச்சுக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே இந்த விடயத்திற்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ஆகவே  நாட்டின் தேசியக் கொடியை பறக்க விடுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை,  நாட்டில் கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் என சொல்லிக்கொள்ளும் சிலர் போலியான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஆனால் நாட்டில் மீண்டும் பிரச்சினையை தோற்றுவிக்க முயற்சிக்கும் அவர்களின் செயற்பாட்டை கண்டு ஒரு போதும் அஞ்சப்போவதில்லை என அமைச்சர் ராஜித சேனாரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.