எதிர்வரும் காலங்களில் இதற்கான நடவடிக்கையை பல்வேறு தரப்பினருடன் இணைந்து சுற்றுலாத்துறை அமைச்சு மேற்கொள்ளவுள்ளது.
சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ விவகாரங்களுக்கான அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் ஜோன் அமரதுங்க இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
சர்வதேச மட்டத்தில் மெடிகல் டுவரிசம் எனப்படும் தரமான மருத்துவ சிகிச்சைகளுக்கான சுற்றுலாத்தலங்கள் தற்போது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு தரமான மருத்துவ சிகிச்சைகளை வழங்குவதற்கான அனைத்து வசதிகளும், வளங்களும் இலங்கையிலும் உள்ளது. எனவே எதிர்வரும் காலத்தில் மருத்துவ சிகிச்சைக்கான சிறந்த சுற்றுலாத்தலமாக இலங்கையை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
இதற்கான சிகிச்சைகள் குறித்த அட்டவணையொன்றும் அதுகுறித்த விதிமுறைகள் புதிதாக உருவாக்கப்பட வேண்டும். இதற்கான அனைத்து தூதரகங்கள் மற்றும் குடிவரவு திணைக்களத்தின் உதவிகள் பெற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.