சுதந்திரக் கட்சி பிளவுபடுவதைத் தடுக்க மஹிந்த தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்த எஸ்.பி. திசாநாயக்க நடவடிக்கை !

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இரண்டாக பிளவுபடுவதைத் தடுக்கும் நோக்கில் மஹிந்த தரப்பு அணியுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்படவுள்வதற்கு அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
images 

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள சுதந்திரக் கட்சியின் பொருளாளர், அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க,

கட்சியைப்பாதுகாத்துக் கொள்வது தொடர்பில் நேரடியாக மஹிந்த ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படவுள்ளது. அத்துடன் அவருக்கு ஆதரவாக செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும் தனித்தனியான பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் சுதந்திரக் கட்சியை உண்மையாகவே நேசிக்கும் ஒருவர். கட்சி பிளவுபட அவர் இடமளிக்க மாட்டார் என்று நாங்கள் உறுதியாக நம்புகின்றோம்.

அதே போன்று சுதந்திரக் கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் முதல் அனைவரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த வை தொடர்ந்தும் நேசிக்கின்றார்கள்.

அத்துடன் எங்களுடைய கட்சி இழந்துள்ள சிறுபான்மை மக்களின் ஆதரவை எதிர்காலத்தில் மீண்டும் பெற்றுக்கொள்ள வேண்டும். அதற்கான செயற்பாடுகளுக்கு கட்சியின் அனைத்து முக்கியஸ்தர்களும் ஆதரவளிக்க வேண்டும் என்றும் அமைச்சர் திசாநாயக்க தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.