அசாஹீம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்ளப்பு கொழும்பு பிரதான வீதியில் திருக்கொண்டியாமடு (நாவலடி சந்தி) பிரதேசத்தில் இருந்து வீதியின் இரு மருங்கிலும் சுமார் நான்கு கிலோ மீற்றர் தூரம் வரை காணிகள் அற்றவர்கள் சட்டவிரோதமான முறையில் அரச காணிகளில் தங்களுக்குறிய இருப்பிடங்களை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக போடப்பட்ட எல்லை வேலிகள் பொலிஸாரினால் இன்று (27.12.2015) மாலை அகற்றப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி, வாகரை மற்றும் கிரான் பிரதேச செயலகப் பிரிவிற்கு சொந்தமான அரச காணிகளை அப்பகுதிகளில் காணிகள் அற்ற தமிழ் முஸ்லீம் பொதுமக்கள் பிடித்து எல்லைகள் போட்டு வந்த நிலையில் பிரதேச செயலாளர்களினால் செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜயசிங்க தலைமையில் வருகை தந்த பொலிஸாரினால் சட்ட விரோதமாக அரச காணிகளில் போடப்பட்ட எல்லை வேலிகள் அகற்றப்பட்டன.
அப்பகுதிகளில் காணிகளைப் பிடித்த தமிழ் முஸ்லீம் மக்கள் கருத்து தெரிவிக்கையில் எங்களுக்கு குடியிருப்பதற்கு காணிகள் இல்லாததால்தான் தாங்கள் அரச காணிகளில் குடியிருப்பதற்காக வந்துள்ளோம் அனால் அரச அதிகாரிகள் நாங்கள் குடியேர்வதற்கு தடையாகவுள்ளார்கள் என்றும் தெரிவித்தனர்.
இந்த இடத்திற்கு வருகை தந்த மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தெசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் பொது மக்களுடன் கலந்தாலோசித்ததோடு இவ் விடயம் தொடர்பாக மாவட்ட செயலாளருடனும் மற்றும் அதிகாரிகளுடனும் பேசி சுமுகமான தீர்வொன்றைப் பெற்றுத்தருவதாக மக்களிடம் உறுதியளித்தார்.