நாடளாவிய ரீதியிலுள்ள ஆசிரியர் கல்லூரிகளில் இவ்வருட ஆசிரிய பயிற்சி நெறிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் நாளை (28) என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
அரசாங்க பாடசாலைகளில் பணியாற்றும் பட்டதாரியல்லாத ஆசிரியர்கள் மற்றும் ஆசிரிய உதவியாளர்களும் ஆசிரிய பயிற்சிக் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க முடியும் என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை அனுமதிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளிலும், பிரிவெனாக்களிலும் தற்போது பணியாற்றும் ஆசிரியர்களும் பயிற்சிக் கல்லூரிக்காக விண்ணப்பிக்கலாம் என்றும் அவர்கள் முறையான நியமனக் கடிதங்களை வைத்திருக்க வேண்டும் என்றும் அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.
கணிதம், விஞ்ஞானம், ஆரம்பக்கல்வி , சமூகவியல், விவசாயம், மனையியல், சங்கீதம், சித்திரம், அரபு, இஸ்லாம், இந்துசமயம், கிறிஸ்தவம், நடனம், விசேட கல்வி, தமிழ், வணிகம், உடற்கல்வி, உள்ளிட்ட 22 பாடநெறிகளுக்கு ஆசிரியர்கள் விண்ணப்பிக்க முடியும்.
ஆசிரியர் கல்லூரிகளில் காணப்படும் வெற்றிடத்திற்கேற்பவும் பாடசாலைகளில் ஆசிரியர் கடமையேற்றதன் முன்னுரிமையின் அடிப்படையிலும் தெரிவுகள் மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.