100 ஏக்கர் நிலப்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட கச்சானின் விலை கிலோ 100 ரூபாவுக்கு விற்பனை !

அபு அலா
 அம்பாறை மாவட்ட பிரதேசங்களில் செய்யப்பட்ட கச்சான் அறுவடைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.

பொத்துவில் கோமாரி களுகோல்ல பிரதேசத்தில் சுமார் 100 ஏக்கர் நிலப்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட கச்சான் விதைப்பில் 50 ஏக்கர் மேட்டு நிலத்திலும் 50 ஏக்கர் பள்ள நிலத்திலும் செய்யப்பட்டுள்ளது.

DSC04245_Fotor

மேட்டு நிலத்தில் செய்யப்பட்ட கச்சான் அறுவடை இன்று (27) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் கச்சானை கொள்வனவு செய்யும் மொத்த வியாபாரிகளின் வரவும் அதிகரித்துள்ளது.

ஒரு கொத்து 80 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டுவந்த கச்சானின் விலை தற்போது உயர்வடைந்து ரூபா 100.00 ஆக அதிகரித்து விற்பனை செய்யப்பட்டும் வருகின்றன. 

DSC04236_Fotor