2015 வாக்காளர் பெயர் பட்டியலை இம்மாதம் 31 வரை இணையத்தில் பார்வையிடலாம்!

 

elections-secretariat-of-sri-lanka2015ம் ஆண்டிற்கான வாக்காளர் இடாப்பில் உங்கள் பெயர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்த்துக் கொள்ள முடியும் என்று தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இம்மாதம் 31ம் திகதி குறித்த பட்டியல் இறுதிப்படுத்தப்படவுள்ளது. 

அதுவரை பொது மக்கள் தமது பெயர் விபரங்களை சரிபார்த்துக் கொள்ளலாம் என்று தேர்தல்கள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 

www.slelections.gov.lk என்ற இணையத்தளத்தினூடாக உங்கள் பெயர்களை சரிபார்த்துக் கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.