ஜவ்பர்கான்
சுனாமி தாக்கம் ஏற்பட்டு இன்றுடன் 11வருடம் நிறைவடைகின்றது.இதனையொட்டி சுனாமி தாக்கத்தினால் அழிக்கப்பட்ட இலங்கையின் நான்காவது மாவட்டமான மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.
மட்டக்களப்யுபு மாவட்டத்தில் மண்முனைவடக்கு காத்தான்குடி ஆரையம்பதி களுவாஞ்சிக்குடி வாகரை ஆ கிய பிரதேச செயலக பிரிவுகள் சுனாமி தாக்னகத’தால் பெரிதும் பாதிக்கப்பட்டன.இம்மாவட்டத்தில் சுனாமியினால் 2800 பேர் பலியானதுடனட 600க்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளனர்.நூவடி டச்பார் புதுமுகத்துவாரம் ஆகிய கிராமங்கள்முற்றாக அழிக்கப்பட்டன.இக்கிராமத்தில் மாத்திரம் 1800பேர் பலியாகினர்.
நாவலடி திருச்செந்தூர் கிராமத்தில் இடம்பெற்ற சுனாமி நினைவு தின நிகழ்வுகளில் பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.வியாழேந்திரன் என்.சிறினேசன் சமய மற்றும் அரசியல் தலைவர்களும் கலந்து கொண்டதுடன் இறந்தவர்களின் புகைப்படங்களுக்கு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.பல கண்ணீர் மல்க கதறியழுதனர்.