நத்தார் தினத்தை முன்னிட்டு வெலிக்கடை சிறைச்சாலையில் சில கைதிகள் விடுதலை !

அஷ்ரப் ஏ சமத்
இந்த நாட்டில் , நாளாந்தம் சாதாரண மணிதர்கள் அதிர்ஸ்டவசமாக ஏதோ ஒரு வகையில் எதிர்பாரத விதமாக குற்றம் செய்வது இயற்கையாகும். ஆனால் அந்த குற்றவாளிகளின் விசாரணைகளை நீதிமன்றங்களினால் தீர்ப்புக்களை வழங்காமல் மாதக் கணக்கில் வருடக்கணக்கில் வழக்கு பின்போடப்பட்டு, சிறைக்குள் தள்ளப்படுகின்றார்.

SAMSUNG CSC

இதனால் இந்த குற்றவாளியின் வாழ்க்கை மட்டும் மல்ல அவனை நம்பி வாழுகின்ற குடும்பமே சீரழிந்து விடுகின்றன. இந்த சிறைச்சாலை வாழ்க்கை அவனை மீண்டும் ஒரு நிரந்தர குற்றவாளியாக்கின்றது.
இதற்கு முதற் காரணம் இந்த நாட்டினை சுதந்திரத்திற்கு முன் ஆட்சி செய்த வெள்ளையர்கள் பயண்படுத்திய சட்டத்தினையும் தீர்ப்புக்களையும் நாம் இன்றும் பயண்படுத்திக் கொண்டு வருகின்றோம்.

 

அவர்கள் நிர்மாணித்த சிறைச்சாலைகளை முறையையே நாம் பின்தொடர்வதனாலேயே இவ்வாறனதொரு நிலை எற்பட்டுள்ளது. நமது நாட்டுக்கு ஏற்றவாறு இந்த நாட்டில் உள்ள 4 மதங்கள் அடிப்படையில் குற்றவாளிகளை மதரீதியாக அவனை நல்வழிப்படுத்தும் திட்டம் இந்த சிறைச்சாலைகளில் அமுல்படுத்த வேண்டும். அவன் செயத் தவறை உணர்த்தி மீண்டும் அவன் நல்லதொரு மனிதனாக சிறையில் இருந்து வெளிவரல் வேண்டும்.

SAMSUNG CSC
இன்று (25)ஆம் திகதி பொரளை -வெலிக்கடை சிறைச்சாலையில் நத்தார் பண்டிகை ஆராதனைகள் மெல்கம் ரண்ஜித் ஆணடினர் ; தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழவின்போது மீள்குடியேற்றம் ஹிந்து விவகாரம், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் ரீ.எம். சுவாமிநாதன் மற்றும் சிறைச்சாலை ஆணையாளரும் கலந்து கொண்டனர்.
வெலிக்கடை சிறைச்சாலைகளில் நத்தார் பண்டிகை முன்னிட்டு நாடுபூராவும் சிறு குற்றவாளிகள் 550 பேர் ஜனாதிபதியின் மண்னிப்பின்பேரில் விடுதலையானார்கள்.
இதில் வெலிக்கடை சிறைச்சாலையில் 2 பெண்களும் 49 ஆண் கைதிகள் அமைச்சர் சுவாமிநாதன் முன்னிலையில் விடுதலையாகியாகினார்கள்

SAMSUNG CSC

இங்கு தொடர்ந்து உரையாற்றிய மெல்கம் ரண்ஜித் ஆண்டகை,
ஒருவர் குற்றம் செய்தால் அவரின் நீதிமன்ற விசாரணை ; வழக்குகள் பின்போட்டு, பின்போட்டு மாதம் வருடமாகி பல வருடங்கள் கடந்த பின்பேதான் தீர்ப்பு வழங்கப்படுகின்றது. ஒரு சாதார குற்றித்திற்காக பொலிசாரினால் கைது செய்யப்பட்ட குற்றவாளி அவனது தீர்ப்பும் கிடைக்கு மட்டும் சிறையில் வாடுகின்றான்.

ஒரு குற்றம் ;இடம்பெற்றால் அதற்கான தீர்ப்பு இந்த நாட்டில் உடனுக்குடன் தீர்ப்பினை வழங்கும் புதிய சட்ட திட்டங்கள் இந்த நாட்டில் உருவாக்கப்படல் வேண்டும். இதுவிடயத்தில் இந்த நாட்டில் உள்ள சட்டம்ஈ, ஒழுங்கு, மற்றும் நீதி, சிறைக்கூடங்கள் சம்பந்தமான அமைச்சுக்கள் புதிய சட்டங்களை உருவாக்கி எமது நாட்டுக்கு பொருத்தமான சட்டங்களை உருவாக்குதல் வேண்டும்.