ங்கையில் எரிபொருள் விலையைக் குறைக்க முடியாது : எரிபொருள் கூட்டுத்தாபன தலைவர் அறிவிப்பு !

france-fuel_2298290b
உலக சந்தையின் நிலவரத்துக்கு ஏற்ப தற்போதைக்கு இலங்கையில் எரிபொருள் விலையைக் குறைக்க முடியாது என்று எரிபொருள் கூட்டுத்தாபன தலைவர் அறிவித்துள்ளார்.

எரிபொருள் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜயசிங்க இது குறித்து திவயின பத்திரிகைக்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

உலக சந்தையில் தற்போது ஒரு பரல் மசகு எண்ணெய் 36 டொலர்களாக வீழ்ச்சியடைந்துள்ளது.

எனினும் இலங்கையில் கடந்த ஜனவரி மாதம் தொட்டு எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டது. அத்துடன் எரிபொருள் கூட்டுத்தாபனம் தற்போதைக்கு நட்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கின்றது. இதன் காரணமாக எரிபொருள் விலையை மீண்டும் ஒரு முறை குறைக்க முடியாது.

எதிர்வரும் ஆண்டில் அறிமுகப்படுத்தப்படவுள்ள விலைச்சுட்டி மூலம் ஆறு மாதங்களுக்கு ஒரு தடவை எரிபொருள் விலை உலக சந்தை நிலவரத்துக்கேற்ப மாற்றியமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.