அஷ்ரப் ஏ சமத்
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பொறியில் பீடத்தின் பொறியியலாளா்களாக பயிலும் (3) வருடங்களில் உள்ள 284 மாணவா்களின் கல்வி நிலை பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றது.
இந்த நல்லாட்சி அரசில் எங்களது பிரச்சினைகள் சம்பந்தமாக 15 தடவைகள், உயா்கல்வி இராஜாங்க அமைச்சா் , உயா்கல்வி கபினட் அமைச்சா் பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவின் தலைவா் ஆகியோரை கண்டு பேசி உள்ளோம். அறிக்கை சமா்ப்பித்துள்ளோம். ஆனால் இதுவரை எவ்வித பயனுமில்லை.
அவா்கள் கூறுவதெல்லாம் உங்களது பொறியியல் பீடம் அமையப்பெற்றுள்ள இடம்தான் பிரச்சினை. எனச“ சொல்கின்றாா்கள். மெரட்டுவை, பேராதெனியா, பல்கலைக்கழக விரிவுரையாளா்கள் பகுதி நேரம் கற்பிப்பதற்கு ஒழுவிலுக்கு வர மறுக்கின்றாா்கள். கல்கிசையில் அமைந்துள்ள இடத்தில் கூட அடிப்படை வசதிகளும் அங்கு இல்லை.
கொழும்பு ஆவன நுாலக கேட்போா் கூடத்தில் நடைபெற்ற ஊடகவியலாளா் மாநாட்டிலேயயே தென்கிழக்கு பொறியியல் பீட மாணவ அமைப்பின் செயலாளா் அகத் சனித் கருநாரத்தின தெரிவித்தாா்.
அவா் தொடாந்து கருத்து தெரிவிக்கையில்
கொழும்பில் பல்கலைக்கழக மாணிய ஆணைக்குழுவின் முன்னால் சகல மாணவா்களும் ஆர்பாட்டம் நடத்தினோம். ஒரு கிழமைக்குள் சகல நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தாா்கள். நேற்று முன்தினம் லிப்டன் சுற்றுவட்டத்தில் சத்திய பேராட்டம் நடத்தினோம். அமைச்சா் வருவாா் சற்று காற்று இருங்கள். எனச் சொன்னாா்கள் ஆனால் அமைச்சா் அங்கு வரவில்லை. ஏமாந்து சென்றோம். இந்த நல்லாட்சியில் உள்ள் சம்பந்தபட்டவா்களுக்கு நாங்கள் சொல்வதெல்லாம் செவிடன் காதில் ஊதும் சங்கு போன்றே எங்களது போராட்டம் இந்த அரசுக்கு விளங்குகின்றது.
3 வருடங்களைத் தாண்டி அடுத்த ஆண்டுக்கும் இந்த தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இசட் ஸ்கோா் அடிப்படையில் பல்கைலைக்கழகம் வரும் மாணவா்கள் கல்வி நிலை என்ன?
சாதாரண மாக சித்தியடைந்தவா்கள் கொழும்பில் பி.காஸ் அல்லது ஏ.சி. டி தனியாா் பல்கலைக்கழகத்தில் பணம் படைத்த மாணவா்கள் 3 எஸ் படித்தவா்கள் 3 வருடத்திற்குள் கற்று சர்வதேச பொறியியல் பட்டத்தை எடுத்து வேலை செய்கின்றனா்.
எங்களுக்கு ஒழுங்கான, தரமான விரிவுரையாளா்கள் இல்லை. ஒரு இரு விரிவுரையாளா்கள் 1இலட்சத்து 50ஆயிரம் சம்பளத்திற்கு வந்தாலும் பயிற்சி ,ஆய்வு கூடம் போன்ற வசதிகள் அங்கு இல்லை. ஒவ்வொரு நாளும் பயிற்சி செய்கை எடுக்க வேண்டியுள்ளது. வாரத்தில் 3 நாற்கள் பேராதெனியா, அல்லது மொரட்டுவைக்கு பல்கலைக்கழகத்திற்கு சென்று பயிற்சி பெற வேண்டியுள்ளது.
எங்களது பெற்றோா்கள் எங்களை கஸ்டப்பட்டு படிப்பித்து எனது மகள் அல்லது மகள் பொறியிலாளாராக வருவதற்கு கனவு கண்டு எங்களுக்கு செலவு செய்கின்றனா். ஆனால் அவா்களின் அந்தக் கணவு வெறுமனே பாழாய்ப் போகி எங்களது கல்வி நிலை சீரழிகின்றது..
இந்தப் பல்கலைக்கழகத்தில் பொறியில் பீடம் ஆரம்பித்து 3 வருடமாகின்றது. ஏனைய பல்கலைக்கழகத்தில் கற்கும் பொறியியல் பீட மாணவா்களை விட எங்களது கல்வி வெறும் குறைந்த தரத்திலேயே உள்ளது எனலாம்.
ஆகவே இந்த நாட்டின் ஜனாதிபதி, பிரதமா் ,உயா்கல்வி அமைச்சா் பல்கலைக்கழக மாணிய ஆணைக்குழுவினா், மற்றும் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஸ்தாபித்த மறைந்த அமைச்சா் அஸ்ரபின் அடிச்சுவட்டை பின்பற்றும் அரசியல் வாதிகள் இப் பிரச்சினை முன்னெடுக்குமாறும் எமது 284 பொறியியல் மாணவா்களை பிரச்சினை கவணத்திற்கு எடுக்குமாறு வேண்டுகின்றோம். என மாணவா்கள் ஊடகவியலாளா் மாநாட்டில் தெரிவித்தனா்.