சுகாதார அமைச்சில் இடம்பெற்ற அயடின் உப்பின் முக்கியத்துவம் தொடர்பான கருத்தரங்கு !

 சுகாதர திணைக்களத்தினால் மாதாந்தம் நடாத்தி வரும் ஊடகவியலாளா்களுக்கு சுகாதார கருத்தரங்கினை நேற்று சுகாதார கல்வித் திணைக்களத்தில் பதில் சுகாதார அமைச்சா் பைசல் ஹாசீம் நேற்று(22) ஆரம்பித்து வைத்தாா்.
2_Fotor
இந் நிகழ்வில் ஊடகவியலாளா்கள் அயடின் கலந்த உப்பை பொதுமக்கள் பாவனையும் ்அயடின்குறைபாட்டினால் ஏற்படும் பாதிப்பு பற்றியும் அயடின் சத்து வழங்க சுகாதார அமைச்சு மேற்கொண்டு வரும் நடவடிக்கை பொதுமக்கள் தமது ஊடகங்கள் ஊடகா பிரச்சாரப்படுத்துமாறு வைத்திய அதிகாரிகளினால் விளக்கமளிக்கப்பட்டது.
இந் நிகழ்வினை பதில் சுகாதார அமைச்சா் பைசால் ஹாசீம் ஆரம்பித்து உரையாற்றுகையில் 
இந்த நாட்டில் அயடின் கலந்த உப்பை பாவிப்பது கட்டாய கடமை என பாராளுமன்றத்தில் சட்டம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும். எனத் தெரிவித்தாா்.
3_Fotor
  1995ஆம் ஆண்டு அயடின் கலந்து உப்பு பாவிப்பது பற்றி சுகாதார திணைக்களத்தின் சட்டம் கொண்டுவரப்பட்டது. அத்துடன் உப்பு உற்பத்தியாளா்களது உப்பினை எமது சுகாதார பரிசோதக அதிகாரிகள் மாதா மாதம் பரிசோதனை செய்து சுகாதார அமைச்சுக்க அறிவித்தல் வேண்டும். என சட்டம் உள்ளது. உப்பு குறைபாட்டினால் தைரோயிட் ஒட்சின் குறைவானால் உடம்பில் பல குறைபாடுகள், முலை வளா்ச்சி குன்றிக் காணப்படும் களுத்தில் உடம்பில் கட்டிகள் அல்லது தொட்டா எனும் நோய்க்கு ஆளாவாகுவாா்கள். குறிப்பாக கடல் உற்பத்திகளை உண்பது சாலச் சிறந்தது. கிராமிய பிரதேசங்கள் உப்பு உற்பத்தியாளா்கள் உப்பில் அயடின் கலக்காலமல் விற்பனை செய்கின்றனா். அந்த வியாபாரிகளை உற்பத்தியாளா்களளை சுகாதார அதிகாரிகள்  கண்டு பிடித்து அதனை தடுத்து அவா்களை சட்டத்தின் முன் கொண்டுவந்து கட்டாய அயடின் கலப்பினை உட்படுத்தல்  வேண்டும். என பதில் அமைச்சா் பைசால் ஹாசீம் தெரிவித்தாா்.
1_Fotor
இந் நிகழ்வில் சுகாதார திணைக்கள பணிப்பாளா் டொக்டா் பாலித்த மகேபாலவும் வைத்திய அதிகாரிகளும் கலந்து கொண்டு விரிவுரைககளை நிகழத்தினாா்கள்
நாட்டில் உள்ள பல்வேறு ஊடக நிறுவனங்களிலிருந்து  ஊகடவியலாளா்களும் இதில்  கலந்து கொண்டனா்.