தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றிணைந்து கொழும்பில் பாரிய போராட்டம் !

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றிணைந்து பாரிய போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

இந்த போராட்டம் இன்று காலை 9.30 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

இவர்கள் பொரளை – கெம்பல் பார்க்கிலிருந்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGE) விற்கு செல்கின்றார்கள். 

இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், 

”எங்களுக்கு போதியளவு வசதிகள் இல்லை. எமது பல்கலைக்கழக அமைவிடமும் பொருத்தமானதாக இல்லை. இது பற்றி கடந்த அரசாங்கத்திடமும் இந்த நல்லாட்சி அரசாங்கத்திடமும் எழுத்து மூலமாக பல கோரிக்கைகளை, பல தடவைகள் முன் வைத்தோம், ஆனால் அதற்கான எந்த விதமான நடவடிக்கைகளும் இதுவரை எடுக்கப்படவில்லை. 

மூடி மறைக்கவே பார்க்கிறார்கள், தீர்வை பெற்றுத் தரவில்லை. கடந்த 10ம் திகதி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு முன்னால் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தோம். அதற்கான தீர்வு கிடைக்காதமையினாலேயே மீண்டும் இன்று போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம். இதற்கும் தீர்வு கிடைக்காவிடின் மேலும் போராட்டங்களை தொடர்ந்து நடத்துவோம் என்று தெரிவித்தனர். 

இதனால் அந்த இடத்தில் பாரிய வாகன நெரிசல் காணப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். 

இந்த பல்கலைக்கழகத்தில் வடகிழக்கைச் சேர்ந்த தமிழ் மாணவர்கள் பலர் கல்வி கற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.