இந்த வங்கி கணக்குகள் சம்பந்தமான தகவல்களை பெற அரசாங்கம் முயற்சித்ததுள்ளது. எனினும் அதற்கு இடமளிக்க முடியாது என வங்கி அதிகாரிகள் கூறியுள்ளனர்.
தகவல்களை பெற்றுக்கொள்ள இலங்கை அதிகாரிகள் சமர்பித்த விடயங்கள் போதுமானதல்ல என எமிரேட்ஸ் வங்கி அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதனால், தகவல்களை வழங்குவது வங்கி சட்டங்கள் மற்றும் வங்கி செயற்பாடுகளுக்கு முரணானது என்பதுடன் தகவல்களை வழங்குவது தமது வாடிக்கையாளர்களுக்கு கெடுதியான பாதிப்புகளை ஏற்படுத்தும் எனவும் வங்கி அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
ராஜபக்சவினரின் வங்கி கணக்குகள் பற்றிய தகவல்கள் பெற்றுக்கொள்ள முடியாமைக்கு இலங்கை அதிகாரிகளே பொறுப்புக் கூறவேண்டும். அதிகாரிகள் கையாண்டு செயற்பாடுகளே இதற்கு காரணம்.
டுபாயில் உள்ள இந்த வங்கி கணக்குகள் சம்பந்தமான தகவல் வெளியானதும் அது தொடர்பான தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் பொறுப்பு முதலில் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு முதலில் வழங்கப்பட்டது.
ஆணைக்குழுவின் தலைவியான தில்ருக்ஷி விக்ரமசிங்க, தகவல்களை பெற்றுக்கொள்வதற்காக ராஜதந்திர மட்டத்திலான நடவடிக்கைகளை எடுக்காது தனியார் சட்ட நிறுவனம் ஒன்றுடன் இணைந்து தகவல்களை பெற முயற்சித்தார்.
சரியான ராஜதந்திர முறைகளை பயன்படுத்தாது தனிப்பட்ட மட்டத்திலான செயற்பாடுகள் மூலம் பிரிதொரு நாட்டில் இருக்கும் வங்கி கணக்கின் தகவல்களை பெற்றுக்கொள்ள முடியாது.
இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் தலைவியின் தூரநோக்கற்ற செயற்பாடு காரணமாக இறுதியில் நாட்டுக்கு கிடைக்க வேண்டிய 500 மில்லியன் டொலர்கள் கிடைக்காமல் போயுள்ளதுடன் விசாரணைகளும் ஸ்தம்பித்துள்ளன.