அபு அலா
கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் மாகாண பிரதிப் பணிப்பாளராக இலங்கை நிர்வாக சேவையைச் சேர்ந்த எம்.பிர்னாஸ் இஸ்மாயில் இலங்கை நிருவாக சேவை தரம் இரண்டுக்கான பதவிக்கு பதவி உயர்வுபெற்று நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் தனது கடமைகளை இன்று திங்கட்கிழமை காலை (21) திருகோணமலை நகரில் அமைந்துள்ள மாகாண சுகாதார பணிப்பாளர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
கிழக்கு மாகாண சுகாதார பிரதிப் பணிப்பாளராக கடமையாற்றி வந்த சிவப்பிரியா வில்வரத்தனம் கிழக்கு மாகாண கலாச்சார பணிப்பாளராக பதவி உயர்வு பெற்றுச்சென்றுள்ளமையை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கே இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சு மற்றும் சுகாதார, சுதேச மருத்துவ, நன்னடத்தை மற்று சிறுவர் பராமரிப்பு, சமூக நலன்புரிச் சேவைகள், கிராமிய மின்சார அமைச்சின் உதவிச் செயலாளராக கடமையாற்றி வந்தமையும் குறிப்பிடத்தக்கது.