கருணாவைப் போன்று விக்கியும் பயன்படுத்தப்படுகிறார் : முன்னாள் எம்.பீ.அரியம் !

ஜவ்பர்கான்

ariynenthiran mp
தமிழ் மக்கள் பேரவை என்பது வெறுனே தமிழ் மக்களை குழப்புகின்ற விடயம்.இது தமிழ் மக்களுக்கு புதிதல்ல.தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வு வருகின்றபோது இவ்வாறுதான் நடந்து வந்துள்ளது.கடந்த 65 வருடகாலமாக இவை நடைபெற்றே வந்துள்ளன.இதன் மற்றொரு வடிவம்தான் தற்போது உருவாகியுள்ள தமிழ் மக்கள் பேரவை ஆகும்.இவ்வாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

 
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் ஆரம்பிக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் பேரவை குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தமிழ் மக்களின் இனப்பிரச்சினைத்தீர்வை தட்டடிக்கழிக்க பலர் காலங்காலமாக பாவிக்கப்பட்டு வந்திருக்கிறார்கள்.அது விடுதலை புலிகள் காலத்திலும் இருந்துள்ளது.அவர்வாறுதான் அன்று கருணா அம்மான் பாவிக்கப்பட்டார்.முப்படைகளையும் கரும்புலிகளையும் கொண்டிருந்த சக்திமிக்க விடுதலை புலிகளை அழிக்க அவர் கருவியாக பயன்படுத்தப்பட்டார்.அதே போன்று இன்று விக்னேஸ்வரன் கருவியாக பாவிக்கப்படுகின்றார்.
சந்திரிகா காலத்திலும் அதன் பிற்பட்ட காலங்களிலும் தீர்வுகள் எட்டப்பட்போகும் நிலையில் இவ்வாறான சக்திகளை உருவாக்கி அதனை தடுப்பதும் தள்ளிவைப்பதும் புதிய விடயமல்ல.

 
தமிழ் தேசிய கூட்டமைப்பு என்னும் ஆலமரத்தை அசைக்க முடியாது.தமிழ் மக்கள் பேரவை இது ஒரு அரசியல் கட்சியல்ல அமைப்பு என்றே கூறப்படுகின்றது.அவ்வாறு கட்சியாக உருவெடுத்து தேர்தல்களை சந்தித்தால் அதற்கு மக்கள் நல்ல பாடம் புகட்டுவார்கள்.இதேபோன்று பல்வேறு முனைப்புகள் முன்னெடுக்கப்பட்டு அவைகள் தோல்;வியிலேயே முடிவடைந்திருக்கின்றன. என்றார்.