அபு அலா
புதிய அரசியல் அமைப்பிற்கான பொதுமக்களின் பங்களிப்பு இந்நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்ட கரையோர பிரதேச “யூத் அசம்பிலி ஸ்ரீலங்கா” மாற்றுக்கொள்கைக்கான நிறுவனத்தின் பிராந்திய உறுப்பினர்களுக்கான நியமனங்கள் இன்று (20) வழங்கி வைக்கப்பட்டது.
யூத் அசம்பிலி ஸ்ரீலங்கா நிறுவனத்தின் ஒருங்கிணைப்பு பணிப்பாளரும் ஊடகவியலாளருமான பைஷல் இஸ்மாயில் தலைமையில் அட்டாளைச்சேனை தள ஆயுள்வேத வைத்தியசாலை கூட்ட மண்டபத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு மெஸ்பரோ அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் அட்டாளைச்சேனை தள ஆயுள்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகருமான வைத்தியர் கே.எல்.எம்.நக்பர் இந்நியமனங்களை வழங்கி வைத்தார்.
யூத் அசம்பிலி ஸ்ரீலங்கா அமைப்பின் சார்பிலும், மெஸ்பரோ அமைப்பின் சார்பிலும் பின்வரும் உத்தியோகத்தர்கள் நியமனம் செய்ப்பட்டுள்ளனர்.
பிரதிப் பணிப்பாளராக அதிபர் ஏ.எல்.யாசீன், அரசியல்துறை மற்றும் பொதுமக்கள் தொடர்பு பணிப்பாளராக அதிபர் எம்.ஐ.எம்.றியாஸ், இணைப்பாளராக வைத்தியர் ஜே.யூசுப், தேசிய இணைப்பாளராக எம்.ஏ.சி.பாஹிக், ஊடகப் பேச்சாளரும் பணிப்பாளராக ஊடகவியலாளர் ஏ.எல்.றமீஸ், ஒருங்கிணைப்பு பணிப்பாளராக ஊடகவியலாளர் எம்.ஐ.முஹம்மது பைஷல், கள இணைப்பாளராக எஸ்.எம்.றிஜால்டீன் ஆகியோர்கள் இப்பதவிகளுக்கான நியமனங்களை பெற்றுக்கொண்டனர்.