எஸ்.எம்.அறூஸ்
வசந்தம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மக்கள் அபிமானம் பெற்ற அதிர்வு அரசியல் களம் நிகழ்ச்சியை இரவு 9 மணிக்கு ஒளிபரப்புமாறு பார்வையாளர்கள் சுயாதீன தொலைக்காட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுக்கின்றனர்.
வசந்தம் தொலைக்காட்சியின் செய்தி பிரிவின் பொப்பதிகாரி எம்.எஸ். இர்பான் தயாரித்து வழங்கும் அதிர்வு நிகழ்ச்சி ஒவ்வொரு வியாழக்கிழமை தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வந்தது. இந்நிகழ்ச்சியில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், அமைச்சர்கள்,பாாளுமன்ற உறுப்பினர்கள் பங்கு கொண்டு தமது கருத்துக்களைத் தெரிவித்து வந்தனர்.
நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் எம்.எஸ். இர்பானின் கேள்விகள் மற்றும் நிகழ்ச்சியின் சமநிலையான போக்கு என்பன பார்வையாளர்களினதும், மக்களிளாலும் பெரிதும் விரும்பப்பட்டதுடன் வசந்தம் தொலைக்காட்சியின் பக்கம் கூடுதலான புதிய பார்வையாளர்களை ஈர்த்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இவ்வாறான ஒரு நிலையில் அதிர்வு நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் நேரம் மாற்றப்பட்டதுடன் அது ஞாயிறு தினத்தில் இரவு 7 மணியாக மாற்றியமைக்கப்பட்டது. இந்த நேர மாற்றம் பார்வையாளர்களுக்கு அசௌகரியத்தையும், நிகழ்ச்சியை பார்வையிட முடியாத நிலையையும் ஏற்படுத்தியுள்ளது.
இரவு 9 மணி என்கின்றபோது பெரும்பாலான பார்வையாளர்கள் வீடுகளில் ஓய்வாக இருக்கின்ற நேரம் என்பதால் குறித்த அதிர்வு நிகழ்ச்சியை பார்வையிடுவதற்கு வாய்ப்பாக அமைந்துவிடும். தமது மக்கள் பிரதிநிதிகளினது கருத்துக்களையும், அவர்களது கொள்கைகளையும் பகிரங்கமான முறையில் அறிந்து கொள்வதற்கு இதனை பெரும் வாய்ப்பாக பார்க்கின்றனர்.
இந்நிகழ்ச்சி இடம்பெறும் நேரம் மக்கள் தங்களது தேவைகளை நிறைவேற்றுவதற்காக பெரும்பாலும் வெளியில் நிற்பதாலும், மாணவர்கள் வீடுகளில் கற்றல் செயற்பாடுகளில் ஈடுபட்டிருப்பதாலும் முக்கியத்தவம் வாய்ந்த ஒரு நிகழ்சியான அதிர்வை பார்க்க முடியாத நிலைக்கு பார்வையாளர்கள் தள்ளப்படுகின்றனர்.
எனவே, அதிர்வு நிகழ்ச்சியை இரவு 9 மணிக்கு ஒளிபரப்புமாறு சுயாதீன தொலைக்காட்சியின் நிர்வாகத்திடம் மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர். மக்களின் விருப்பத்தை நிவைவேற்ற வேண்டும் என்பதற்காகவே இவ்வாறான அரசியல் கலந்துறையாடல் நிகழ்ச்சியை நடத்தும் வசந்தம் தொலைக்காட்சி நேர மாற்றத்திலும் மக்களின் கருத்துக்களை செவிசாய்ப்பார்கள் என நம்புகின்றோம்