எப்.முபாரக்
அனுமதிப்பத்திரமின்றி எட்டு முதிரை மரக் குற்றிகளை முச்சக்கர வண்டியில் கொண்டு சென்ற இருவரை இம்மாதம் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் ருவன் திஸாநாயக்க சனிக்கிழமை (19) உத்தரவிட்டார்.
கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கந்தளாயில் இருந்து அக்போபுரவிற்கு அனுமதிப்பத்திரமின்றி முச்சக்கர வண்டியொன்றில் எட்டு முதிரை மரக்குற்றிகளை கொண்டு சென்ற போதே கந்தளாய் போக்குவரத்து பொலிஸார் சந்தேக நபர்கள் இருவரையும் வெள்ளிக்கிழமை(18) இரவு கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர்கள் பயன்படுத்திய முச்சக்கர வண்டி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளதோடு, 38மற்றும் 42,வயதுடைய சந்தேக நபர்களை கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
இச்சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.