தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பிரதி இராஜாங்க அமெரிக்க உதவிச் செயலாளர் நிஷா பிஸ்வால், இன்று காலை இலங்கையை வந்தடைந்தார்.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தடைந்த இவரை, வெளியுறவு விவகார அமைச்சு மற்றும் அமெரிக்க தூதரக அதிகாரிகள் ஆகியோர் வரவேற்றனர்.
இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோரை சந்திக்கவுள்ளார்.