பாறுக் ஷிஹான்
அகில இலங்கை முஸ்லீம் லீக் வாலிப முன்னணியின் யாழ் மாவட்ட சம்மேளனத்தினால் நடத்தப்பட்ட இலவச மூக்குக்கண்ணாடி வழங்கும் நிகழ்வு இன்று காலை 10 மணிக்கு யாழ் ஒஸ்மானியா கல்லூரி மஹ்மூத் மண்டபத்தில் ஆரம்பமானது.
இதன் போது இந்நிகழ்வை கலாபூசணம் எம்.என் லாபீர் வரவேற்புரையை நிகழ்த்தியதுடன் முஹம்மதியா ஜூம்மா பள்ளிவாசல் பிரதம இமாம் எம்.ஐ மஹ்மூத் பலாஹி ஹிராஅத் ஓதி ஆரம்பித்து வைத்தார்.
இம்மூக்கு கண்ணாடிகள் சுமார் 600 பயனாளிகளிற்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ள அதே வேளை இதற்கு அனுசரணையாக லயன்ஸ் கழகம்,சர்வோதயம் அமைப்பு என்பன இணைந்து செயற்பட்டன.
மேலும் யாழ் மாவட்டத்தில் அண்மையில் ஆரம்பமான அகில இலங்கை முஸ்லீம் லீக் வாலிப முன்னணியின் செயற்பாட்டை விஸ்தரிக்க உள்ளதாக அதன் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.