அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் மாநாடு !

பி.எம்.எம்.காதர்

adcaja
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் 20 ஆவது ஆண்டு நிறைவையொட்டிய மாநாடு இம்மாதம் 25 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 3.00 மணிக்கு நிந்தவூர் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் சம்மேளனத்தின் தலைவர் கலாபூஷணம்,கலை வித்தகர் மீரா.எஸ்.இஸ்ஸடீன் தலைமையில் நடைபெறவுள்ளது.
இம்மாநாட்டில் பிரதம அதிதியாக நகர திட்டமிடல் நீர வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான றஊப் ஹக்கீம், கௌரவ அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

 
சிறப்பு அதிதிகளாக சுகாதார பிரதி அமைச்சர் பைசால் காசிம்,விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி; எச்.எம்.எம்.ஹரீஸ், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர், அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஐ.எம்.மன்சூர், ரவீந்திரன் கோடீஸ்வரன் மற்றும் ஊடக நிறுவனங்களின் பிரதானிகள்,உள்ளுராட்சி மன்றங்களின் பிரதானிகள் உள்ளீட்ட அரசியல் கட்சிகளின் முக்கியஸ்தர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இதன்பொது சிரேஸ்ட ஊடகவியலாளர்கள் கௌரவிப்பும் இடம்பெறவுள்ளது.