2016ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான இறுதி வாக்கெடுப்பு இன்று மாலை இடம்பெற்றது.
இதில் வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக 160 வாக்குகளும் எதிராக 51 வாக்குகளும் வழங்கப்பட்டுள்ளன.
பாராளுமன்ற உறுப்பினர்களான டக்ளஸ் தேவானாந்தா, லக்ஷ்மன் செனவிரட்ன மற்றும் ஆறுமுகம் தொண்டமான் ஆகியோர் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
13 பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை என்பதுடன், கூட்டு எதிர்க்கட்சிகள் மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகியன எதிராக வாக்களித்துள்ளன.
பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, பவித்ரா வன்னியாராச்சி, ஜனக பண்டார தென்னகோன், கீதா குமாரசிங்க, பிரேமலால் ஜயசேகர, மனுஷ நாணயக்கார, தேனுக விதானகமகே மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் செல்வம் அடைக்கலநாதன் உட்பட்ட 13 பேர் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.
அத்துடன் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷவும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.