சமுகம்சார் அரசியல் நீரோட்டத்தில் சமுகத்தை ஒரு வகையான உணர்வு நிலையில் வைத்திருப்பவர்களாலேயே வாய்ச்சவடால்கள் மூலம் பிரச்சினைகளை உருவாக்கவும் அதிலே நமது அரசியலை சமுகத்தை ஏமாற்றியும் செய்ய முடிகிறது.
இவ்வாறான அரசியலை எமது தலைமை விரும்பவில்லை அதுவே எமது பின்னடைவாக சிலர் கருதுகின்றனர்.உண்மையை பேசி சமுகத்தை வழி நடத்த நினைத்த எமது கட்சிக்கு இது பின்னடைவல்ல பலம் பொருந்துவதற்கான இடைவெளி இவ்வாறு இன்று தெஹிவளையில் இடம்பெற்ற உயர்கல்வி பெறும் கிழக்கு மாகாண இளைஞர்களுடனான சந்திப்பில் அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் அஸ்மி ஏ கபூர் தெரிவித்தார்.
மேலும் தனதுரையில்,
அதாஉல்லாஹ் வை வீழ்த்த கிழக்கு மாகாண அரசியல் அரங்கிலே முன் வைக்கப்பட்ட குற்றச்சாட்டாக மூன்று விடயங்களை எடுத்துக்கொள்வோம்,
1.வட்டமடு விவசாயிகளின் காணி பிரச்சினை
2. நுரைச்சோலை கரும்பு பயிர்ச் சேய்கையாளர்களின் பிரச்சினை
3.நுரைச்சோலை சுனாமி வீட்டுத்திட்டம்
அதாஉல்லா அமைச்சர் தீர்வு பெற்றுக்கொடுக்க வேண்டுமென்ற ரீதியில் அரசியல் ரீதியான நகர்வுகளை செய்த வேளை அதை தடுத்து நிறுத்தி அவசரமாக நீதிமன்றம் வரைக்கும் சென்ற வட்டமடு விவசாயிகளின் நிலம் தொடர்பான பிரச்சினைக்கு இன்றைய சூழலில் தீர்வு என்ன? எவ்வாறு வழங்கப்போகிறீர்கள்? மக்களை வீதிக்கிறக்கி ஆர்பாட்டங்கள் மூலமாகதான் முடிவுகள் காண வேண்டும் என்றால் அதிகாரங்களும் ஆர்ப்பரிப்புகளும் எதற்காக? அதாஉல்லாஹ் மீதான அரசியலுக்கான வீண்பழி எதற்க்காக?
சுனாமி வீட்டுத்திட்டம் தொடர்பாக அதாவுல்லா மீதான பழியை சுமத்திய உங்களால் நல்லாட்சி யின் பங்குதாரர்களாக இருக்கின்ற ஜாதிக ஹெல உறுமயவினால் நீதிமன்றம் வரை கொண்டு சென்ற விடயத்தை பேசி அம்மக்களுக்கு வீடு பெற்றுக்கொடுப்பதில் ஏன் தாமதம் அது தொடர்பாக ஒரு வார்த்தையேனும் பேசினீரா? அடுத்த சுனாமி தினமும் வருகிறது.
அதாஉல்லாஹ் அமைச்சரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு கட்டமாக வழங்கப்பட்ட பணத்தின் மீதியை யாவது வழங்க ஆவணை செய்வார்களா?
நுரைச்சோலை விவசாயிகளின் கரும்பு செய்கை தொடர்பாகவும் சீனித்தொழிற்சாலை தொடர்பான அமைச்சராக முஸ்லீம் ஒருவர் இருக்கிற நல்லாட்சியில் நாடு தழுவிய தலைவர்களாக சித்தரிக்கப்டுகிறவர்களால் ஏன் இதுவரை நுரைச்சோலை விவசாயிகளின் பிரச்சினை தீர்த்துவைக்கப்படாமல் செல்கிறது
இதையாவது நல்லாட்சியில் தீர்த்து வைப்பார்களா?
ஊசி கொண்டு எடுக்க முயன்றவரை தள்ளி விட்டு உலக்கைகளிடம் நாம் கொடுத்திருக்கிறோம்
உண்மை வெல்லும் என்பதில் நம்பிக்கையோடு இருக்கிறோம் இருப்போம் அதிகாரம் என்பதை அடித்து கனிய வைக்க முடியாது அவ்வாறு கனிந்தால் அது பழமல்ல அதற்கு வேறு பெயர் இதை நாம் ஓய்வாகவே எடுத்து கொள்கிறோமே தவிர பின்னடைவாகவல்ல என்றார்.