சாய்ந்தமருது பிரதேச அபிவிருத்திற்கு 1 கோடி 5 லட்சம் நிதி ஒதுக்கீடு !

ஹாசிப் யாஸீன்

harees

சாய்ந்தமருது பிரதேச அபிவிருத்திற்கு விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் 1 கோடி 5 லட்சம் ரூபாவினை ஒதுக்கீடு செய்துள்ளார்.

இந்நிதி ஒதுக்கீட்டின் மூலம் கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையில் புதிய வகுப்பறைக் கட்டிட நிர்மாணத்திற்கு 50 லட்சம் ரூபாவும், சாய்ந்தமருது விளையாட்டு மைதான அபிவிருத்திற்கு 20 லட்சம் ரூபாவும், சாய்ந்தமருது வொலிவேரியன் காரியப்பர் வீதி மற்றும் முகைதீன் கீற்று வீதி என்பவற்றிக்கு கொங்றீட் இடுவதற்கு 35 லட்சம் ரூபாவும் என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்வேலைத்திட்டத்தின் கீழ் இரண்டு வீதிகளுக்கு கொங்றீட் இடுதல் மற்றும் விளையாட்டு மைதான அபிவிருத்தி வேலைகள் என்பன ஆரம்பிக்கப்பட்டு நிறைவடைந்துள்ளதுடன் ஸாஹிரா தேசிய பாடசாலையில் புதிய வகுப்பறைக் கட்டிடத்திற்கான நிர்மாண வேலைகள் இடம்பெற்று வருகின்றன என பிரதி அமைச்சரின் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.