உள்ளுர் உற்பத்திப் பொருட்களின் கண்காட்சியும் விற்பனையும் – விவசாய அமைச்சர் பிரதம விருந்திராக பங்கேற்பு!

Untitled-2_Fotor

சப்னி

உள்ளூர் உற்பத்திப் பொருட்களுக்கான சந்தைவாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுக்கும் நோக்கில் டயகோணியா சர்வதேச அமைப்பின் நிதி ஒதுக்கீட்டின் ஓர் அங்கமாக அக்கரைப்பற்று சொன்ட் மற்றும் சுவாட் ஆகிய உள்ளுர் அரசசார்பற்ற அமைப்புக்கள் இணைந்து அம்பாறை மாவட்டத்திலுள்ள உள்ளுர் உற்பத்தியாளர்களை ஒன்றுதிரட்டி அக்கரைப்பற்று சுவாட் மண்டபத்தில் உள்ளூர் உற்பத்திக்கான கண்காட்சிப்படுத்தலை சுவாட் மற்றும் சொன்ட் அமைப்பின் ஸ்தாபர் திரு.ச.செந்துராசா அவர்களின் தலைமையில் 16.12.2015ம் திகதி புதன் கிழமை காலை 10.00 – பி.ப 1.30 மணிவரை சுவாட் தலைமைக்காரியாலயத்தில் திறன்பட முன்னெடுக்கப்பட்டது.
 
இதன்போது தமிழ்தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாண விவசாய, கால்நடைகள், மீன்பிடி, நீர்பாசன கூட்டுறவு அமைச்சர் கௌரவ கி.துரைராஜசிங்கம் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார். 
 
இதன்போது கிழக்குமகாணத்தில் ஒள்ளுர் உற்பத்திக்கான சந்தைவாய்ப்புக்கான அடித்தளம் இந்த இடத்தில் இடப்படுவதையிட்டு மகிழ்ச்சி அடைவதுடன் , தமிழ்- முஸ்லிம் மக்களுக்கிடையேயான புரிந்துணர்வும் ஒற்றுமையும் தான் கிழக்கு மாகாணத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசோடு இணைந்து தமிழ்தேசிய கூட்டமைப்பு ஓர் நல்லிணக்க ஆட்சியை முன்கொண்டு செல்வதற்கான காரணமாய் அமைந்தமையும் இங்கு குறிப்பிட்டுக் கூறினார்.
 
இத்துடன் திருவாளர். ச. செந்தூராசா அவர்கள் கூறும் போது யாழ்ப்பாணத்தில் இவ்வாறான முன்னெடுப்புக்கள் உள்ளுர் மற்றுமன்றி சர்வதேசத்துக்கும் ஏற்றுமதி செய்யக்கூடிய அளவில் தொடர்புகளை ஏற்படுத்த ஏதுவாக அமைந்துள்ளதாகவும், எதிர்காலத்தில் இங்குள்ள விவசாயிகளுக்கும் பாரியளவிலான தொடர்புகளை ஏற்படுத்தி அதிக இலாபம் ஈட்டக்கூடிய வகையிலான ஒழுங்குகளை எமது அமைப்பினால் முன்னெடுப்போம் எனவும் கூறினார்.
 
அத்துடன் இக்கண்காட்சி நிகழ்வை சிறப்பிக்கும் வகையில் உள்ளுர் அரசசார்பற்ற அமைப்புக்களின் பிரதிநிதிகள், உள்ளுர் கொள்வனவாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் உட்பட பலரும் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும் .
7b00e11d-a401-43bd-b990-be4882dc08ac_Fotor